Latest News

  

கந்தூரி ஊர்வலம் நடத்த கடும் நிபந்தனைகள் விதிப்பு !


தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளி கந்தூரி எதிர்வரும் 08-04-2016 அன்று கந்தூரி ஊர்வலமும், இதை தொடர்ந்து 18-04-2016 அன்று சந்தனக்கூடு விழா நடைபெற இருப்பதாக கந்தூரி விழா குழுவினர் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் கந்தூரி விழா தொடர்பாக விழா கமிட்டியினருக்கும், அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட அமைப்பிற்கும் இடையே ஏற்பட்டுள்ள கொள்கை கருத்து வேறுபாடால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்புள்ளது என கருதி, இது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் இன்று பகல் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் குருமூர்த்தி முன்னிலையில் நடந்தது.

இந்த அமைதி பேச்சுவார்த்தையில் கந்தூரி விழா கமிட்டியின் சார்பில் எம்.எம் முஹம்மது இப்ராஹீம், உபைதூர் ரஹ்மான், சுல்தான், பைத்துல் ரஹ்மான் ஆகிய 4 பேர்களும், அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பில் செயலர் ஜமீல் எம் ஸாலிஹ், மீடியா மேஜிக் நிஜாமுதீன் ஆகியோரும், தமுமுக சார்பில் அஹமது ஹாஜா, கமாலுத்தீன் ஆகியோரும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளைகள் சார்பில் எம்.கே.எம் ஜமால் முஹம்மது, ராஜிக் அஹமது, அல்லாபிச்சை, பக்கீர் முகைதீன் மற்றும் வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் அருண் மொழி, அதிரை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் உதவி ஆய்வாளர் சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அமைதி பேச்சுவார்த்தை முடிவில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது:
1. ஊர்வலத்தை மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிக்குள் முடிக்க வேண்டும்.

2. ஊர்வலம் செல்லும் பாதையில் வெடி வெடிக்க கூடாது.

3. மேலத்தெரு அல் பாக்கியத்தூஸ் சாலிஹாத் பள்ளி வாசல் பகுதி, நடுத்தெரு, புதுமனைத்தெரு, சிஎம்பி லேன், ஆஸ்பத்திரி லேன் உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலம் செல்லக்கூடாது.

4. விழா குழுவினர் கந்தூரி விழாவில் பங்கேற்று செல்ல வேண்டும்.

5. ஊர்வலத்தில் 1 கொடி, 1 பள்ளாக்கு, 5 உருப்படி மட்டுமே அனுமதி.

6. பள்ளிவாசல்கள் முன்னும், பின்னும் 100 மீட்டர் இடைவெளியில் வாத்திய இசை இசைக்ககூடாது.

7. ஊர்வலத்தில் சிறுவர்கள், பெரியவர்கள் ஆடி, பாடி செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

8. கந்தூரி விழா எதிர்தரப்பினர் சட்ட ஒழுங்கு எங்களால் பாதிக்கப்படாது எனவும், கந்தூரி விழாவிற்கு எங்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது எனவும் தெரிவித்தனர்.

9. விழாவில் சட்ட ஒழுங்கு பாதிக்கும் வகையில் அசம்பாவிதம் ஏற்படுமாயின் விழா குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.

10. தேர்தல் நடத்தை விதி முறை அமலில் உள்ளதால் எந்த ஒரு கட்சி சின்னமோ, இதர கட்சி வர்ணங்களோ, இடம் பெறாமல் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதிக்கப்படுகிறது.

11. பொதுமக்கள் மற்றும் தேர்வு எழுதும் மாணவர்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது.

12. காவல்துறை நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடத்த வேண்டும்.

13. மேற்காணும் நடவடிக்கைகள் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளின் படி வீடியோ பதிவு செய்யப்படும்.

மேற்கண்ட நிபந்தனைகள் மீறப்பட்டதாக தெரிய வந்தால் மேற்படி தேர்தல் நடத்தை விதிகளின் படி வழக்குகள் தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
நன்றி : அதிரைநியூஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.