உத்தர பிரதேசம் உள்பட தேர்தல் நடைபெற இருக்கும் 5 மாநிலங்களில் பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கான தடையை இம்மாதம் 31ம் தேதி வரை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக (பிப்.10, 14, 20, 23, 27, மார்ச் 3, 7) தேர்தல் நடைபெறும் எனவும், மணிப்பூரில் 2 (பிப்ரவரி 27, மார்ச் 3) கட்டங்களாகவும், உத்தரகாண்ட் , கோவா ஆகிய 2 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக (பிப்ரவரி 14) தேர்தல் நடத்தப்படும் என்றும், பஞ்சாபில் பிப்ரவரி 20ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் மார்ச் 10ம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதேசமயம், கோவிட் பரவலை கருத்தில் கொண்டு முதலில் இம்மாதம் 15ம் தேதி வரை தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் பொதுகூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்தது. கடந்த 15ம் தேதியன்று பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கான தடையை இந்திய தேர்தல் ஆணையம் 22ம் தேதி வரை நீட்டித்தது. இந்நிலையில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கான தடை தொடர வேண்டுமான என்பது குறித்து முடிவு செய்ய, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் ஐந்து மாநில சுகாதார செயலாளர்கள், மத்திய சுகாதார செயலாளர்களுடன் தேர்தல் குழு நேற்று காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தியது.
அதன் முடிவில், கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கான தடையை இம்மாதம் 31ம் தேதி வரை இந்திய தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது. அதேசமயம் 1 மற்றும் 2ம் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இம்மாதம் 28ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை பொதுக்கூட்டங்களை நடத்த தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வதற்கான நபர்களின் வரம்பு 5லிருந்து 10ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், கோவிட் கட்டுப்பாடுகளுடன் நியமிக்கப்பட்ட திறந்தவெளிகளில் விளம்பரத்திற்காக வீடியோ வேன்கள் அனுமதிக்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் டிஜிட்டல் வழிமுறையில் பிரச்சாரம் செய்ய அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment