
- மருத்துவ மேற்படிப்பிற்க்கான இனிசெட் ஜூன் 16 ஆம் தேதி நடைபெற இருந்தது.
- இந்த இனிசெட் நுழைவுத்தேர்வை ஒரு மாதத்திற்கு ஒத்திவக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு.
எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட சில மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் பிஜி
படிப்புகளுக்கு இனிசெட் நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த
தேர்வு வருகிற ஜூன் 16 ஆம் தேதி நடைபெற இருந்தது. ஏற்கனவே கொரோனா
பெருந்தொற்றின் காரணமாக மருத்துவத்துறையை சேர்ந்தவர்கள் அனைவரும் கடும் மனா
உளைச்சலில் இருக்கின்றனர். இந்நிலையில், குறைந்தது ஒரு மாதத்திற்காவது
இந்த இனிசெட் தேர்வை எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவக்கல்லூரிகள்
ஒத்திவைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒரு மாதத்திற்கு பின் கொரோனா பரவல் நிலையை பொறுத்து
தேர்வுகள் நடத்தப்படுமா அல்லது மீண்டும் தள்ளி வைக்கப்படுமா என்பது
குறித்து அறிவிப்புகள் வெளியாகும் எனவும் உச்சநீதிமன்றம் சார்பில்
கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment