செல்போனுக்கு சார்ஜ் போட்டபோது ஏற்பட்ட தீயில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் அரங்கநாதபுரம் காதர்பாய் தெருவில் வசித்து வருபவர் 90 வயது முதியவரான ஹபிக் முகமது. இவரது மகள் மகரூர்சா.
இவர் நேற்றிரவு தனது செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிக்கொண்டிருந்தார்.அப்போது திடீரென செல்போனில் தீப்பற்றியது.
மண்ணெண்ணெய் கேன்
செல்போனில் பற்றிய தீ அருகில் இருந்த மண்ணெண்ணெய் கேனுக்கும் பரவியது. இதனால் அருகில் படுத்திருந்த மகரூர்சா படுகாயம் அடைந்தார்.
காப்பாற்ற முயன்ற தந்தை
இதனால் அலறி துடித்தார் மகரூர்சா. இதனைக்கண்ட தந்தை ஹபிக் முகமது அவரை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரும் தீயில் சிக்கினார்.
இருவரும் பலி
இதில் ஹபிக் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். தீயில் படுகாயம்
அடைந்த மகரூர்சா தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக
உயிரிழந்தார்.
அதிர்ச்சி சம்பவம்
இந்த விபத்து குறித்து தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகின்றனர். செல்போனில் ஏற்பட்ட தீ 2 உயிர்களை பறித்த சம்பவம்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment