டெல்லி: டெல்லி உட்பட 4 மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நாளை எண்ணப்படுகின்றன.
டெல்லி, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிகை நாளை நடைபெறுகிறது. தேர்தல் நடைபெற்ற மற்றொரு மாநிலமான மிசோரமில் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் 2104- நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்பதால் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் இழுபறி நிலையும் மிசோரம், டெல்லியில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு உண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment