Latest News

அமீரக TIYA-வின் 7-ம் ஆண்டு பொதுக் குழு சிறப்பாக நடைபெற்றது:




பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்



                               
 அன்புடையீர்!        

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

ஏக நாயன் அல்லாஹ்வின் நாட்டத்தால், கடந்த வெள்ளிக்கிழமை 12.10.2012 அன்று மாலை 7.00மணியளவில், தேரா பகுதியின் போரி பள்ளி வளாகத்தின் அருகில் உள்ள கட்டடித்தில், அமீரக தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்(TIYA)தின் பொதுக்குழு தலைவர் B. ஜமாலுத்தீன் தலைமையில், மற்றும் நிர்வாகிகள், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இப்பொதுக்குழுவில் நிர்வாகிகள் சார்பாக உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்ட விஷயங்களும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:


உறுப்பினர்களுடன் விவாதிக்கப்பட்ட விஷயங்கள்:


1. TIYA-வின் தோற்றத்தின் நோக்கம் மற்றும் கடந்த வருடங்களில் TIYA ஆற்றிய பணிகளைப் பற்றி நினைவூட்டுவது.

2. நவம்பர்'2011 முதல் அக்டோபர்'2012 வரையிலான    கணக்கு விபரங்களை பொருளாளர் சமர்பிப்பது.

3.  நமது ஊரில் நடைபெற்று வருகிற ஒழுக்கக் கேடுகள்  குறித்து எச்சரிப்பது.

4.    TIYA-வின் இருப்புத் தொகையில் வீட்டுமனை வாங்குவது குறித்து உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறுவது.

5.  அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பில் (AAMF) TIYA-வின் எவ்வாறு பங்களிப்பது பற்றி தெரிவிக்கப்பட்டது.

6.     TIYA-வின் உறுப்பினர்களிடம் கருத்துக் கேட்பது.

7.     நிர்வாகிகளும்..... நிர்வாக தேர்வும்.




நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் 1:
TIYA-வை தோற்றுவித்து நிர்வகித்த ஆரம்ப கால நிர்வாகிகளின் கடின உழைப்பை நன்றியுடன் நினைவு கூறப்பட்டதுடன், கடந்த காலங்களில் செய்த பணிகளை உறுப்பினர்களுக்கு பிரசுரமாக வழங்கப்பட்டது. [TIYA ஆற்றிய சேவைகளைக் காண இங்கே சொடுக்கவும்.]

தீர்மானம் 2:
கடந்த வருட நவம்பர்-2011 முதல் அக்டோபர்-2012 வரையிலான வரவு செலவு கணக்கை பொருளாளர் S. அப்துல் காதர் அவர்கள் உறுப்பினர்களுக்கு தெரிவித்தார்கள்.

தீர்மானம் 3:
நமதூரில் சமீபகாலங்களில் நடைபெற்று வருகிற ஒழுக்க கேடுகளை உறுப்பினர்களுக்கு நினைவூட்டி, நமது வீட்டுப் பெண்கள், கல்வி கற்கும் மாணவ-மாணவிகளை எவ்வாறு எச்சரிக்கையுடன் நாம் கண்கானிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டது.

தீர்மானம் 4:
TIYA உறுப்பினர்களிடம் வசூலிக்கப்படும் சந்தா இருப்புத் தொகையிலிருந்து இன்ஷாஅல்லாஹ் எவ்விதத்திலும் சட்ட சிக்கல்களுக்கு இடமின்றி, யாரும் ஏமாற்றிவிடாத வகையில், TIYA-வின் உறுப்பினர்களின் கருத்தினைப் பெற்று பெரும்பான்மையான கருத்தின் அடிப்படையில் எதிர்காலத்தில் மனைகள் வாங்குவதா? இல்லையா என்பது பற்றி முடிவு செய்யலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 5:
நமது முஹல்லாவில் உள்ள வடிகால்களையும், சாலைகளையும் தொடர்ந்து சுத்தம் செய்வது, பராமரிப்பது மற்றும் குப்பை-கழிவுகளை முறையாக அகற்றுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றி உரிவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது என முடிவு எடுக்கப்பட்டது.

தீர்மானம் 6:
நமதூரிலும், அமீரகத்திலும் உருவாக்கப்பட்டுள்ள அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பில்(AAMF) - ஊர் ஒற்றுமைக்கு எவ்விதத்திலும் இடையூர்களுக்கு இடமளிக்காமலும், யாருடைய சுய விருப்பு மற்றும் வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட வகையிலும், நமதூரில் உள்ள அனைத்து முஹல்லா நிர்வாகிகளும் ஒன்றுகூடி ஒரு மனதாக எடுக்கப்படும் முடிவுகளுக்கு TIYA ஒத்துழைப்பு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தின் இறுதி நிகழ்வாக வருகிற அக்டோபர்-2012 முதல் செப்டம்பர்-2013 வருடத்திற்கான நிர்வாகிகளை சகோதரர் A. ஜாஹிர் உசேன் மற்றும் சகோதரர் A. சிராஜுதீன் தேர்தல் அதிகாரிகளாக இருந்து, கீழ்காணும் உறுப்பினர்களை நிர்வாகிகளாக ஒருமனதாக தேர்வு செய்தார்கள். அவை வருமாறு:




            தலைவர்:                       சகோதரர் K.M.N. முஹம்மது மாலிக்
துணைத் தலைவர்:           சகோதரர்  H.சபீர் அஹமது
செயலாளர்:            சகோதரர் M.K.N.நூர் முஹம்மது (நூவன்னா)
துணைத் செயலாளர்:       சகோதரர் K. ஃபரோஸ் கான்
பொருளாளர்:                    சகோதரர் s. அப்துல் காதர்

                    ஆலோசனைக்குழு உறுப்பனர்கள்:

சகோதரர். P. அஹமது ஜலாலுதீன்
சகோதரர். V.T அஜ்மல் கான்
சகோதரர். S. அப்துல் முனாப்
சகோதரர். M.I. ஹாஜா முகைதீன்
சகோதரர். A.  சிராஜுத்தீன்
சகோதரர். A.  ராஜிக் அஹமது
சகோதரர். S. சிராஜுத்தீன்









இப்பொதுக்குழு இனிதே கஃப்பாரா துஆவுடன் நிறைவடைந்தது.

அன்புடன்,
நிர்வாகம்,
TIYA
அமீரகம்.



7 comments:

  1. massa allah walthukkal

    s.m. abdul munaf

    ReplyDelete
  2. All TIYAWEST members are requested to use the polling system to get in practice for future polling purpose !! so please register your poll for above question....

    ReplyDelete
  3. புதிதாகப் பொருப்பேற்றிருக்கும் நண்பர்களுக்கு என் வாழ்த்துகள் !

    இறைவன் நாடினால் ! தொடருங்கள் சமூக சேவைகளை என்றென்றும்...

    ReplyDelete
  4. புதிதாகப் பொருப்பேற்றிருக்கும் என் உடன்பிறப்புகள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. புதிதாகப் பொருப்பேற்றிருக்கும் என் உடன்பிறப்புகள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.இறைவன் நாடினால் ! தொடருங்கள் சமூக சேவைகளை என்றென்றும்...

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும்
    அமீரகத்தில் செயலாற்றி வரும் TIYA அமைப்பின் கடந்தகால செயல்பாடுகள் மிகவும் போற்றத்தக்க வகையில் அமைந்துள்ளது. கல்வி,சுகாதாரம்,சுய தொழில்,பெண்கள் முன்னேற்றம் போன்ற எண்ணற்ற செயல்பாடுகள் மூலம் மக்களுக்கான வெகுஜன அமைப்பு என்பதை நிருபித்து உள்ளனர் TIYA அமைப்பின் நிர்வாகிகள். இதுபோல் பொருளாதார முன்னேற்றம் சுயதொழில் முனைவோர் பயிற்சி மார்க்க கல்வி மற்றும் வட்டியில்ல வங்கிமுறை பற்றிய விழிப்புணர்வு போன்ற செயல்திட்டத்தில் பயணப்பட வேண்டும். உங்கள் முயற்சிக்கு அல்லாஹ்வின் அருள் நிறையட்டும் துஆ செய்கிறேன்.
    புதிய நிர்வாகிகளுக்கும், முந்தைய நிர்வாகிகள், ஆலோசகர்களுக்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகளுடன்

    இம்ரான் கரீம்.M
    அமீரக மக்கள் தொடர்பு செயலாளர்
    சமூகநீதி அறக்கட்டளை

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.