நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான ஆலோசனையில் பாஜக சார்பில் எடுத்துரைத்த கருத்துக்களை செய்தியாளரிடம் கூறிய கரு.நாகராஜன்,
ஏற்கனவே கடந்த 9 மாவட்ட தேர்தலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது, இந்த சிசிடிவி கேமராக்கள் போதுமான அளவு, போதுமான இடங்களில் வைக்கப்படவில்லை.
எனவே வருகின்ற தேர்தலை சந்திக்க பாஜக தயாராக இருக்கிறது. முன்கூட்டி தேர்தல் அறிவிப்பு வரவேண்டும் அது எங்களின் முக்கியமான கோரிக்கை. இந்த தேர்தலை பொருத்தவரை கொரோன நோயாளிகளுக்கு 5 மணியிலிருந்து 6 மணிவரை அவர்களுக்கு வாக்களிக்க தனி உரிமை கொடுத்து, 7 இலிருந்து 5 மணி வரை பொது மக்கள் வாக்களிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்கள்.
அதில் ஒரு சின்ன கேள்வி கேட்டோம். கொரோனவால் பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் யாரென்ற லிஸ்ட் யாரிடமும் இல்லை, அப்போ காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை எல்லா பொதுமக்களும் வாக்களித்து விடுகிறோம், இந்த 5 to 6 ஆயிரக்கணக்கான பூத்ல உட்கார்ந்துகொண்டு அதிகாரிகளும், ஏஜெண்டுகளும் எப்ப நோயாளி வந்து வாக்களிக்க போகிறார் என்று உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். இதனால் என்ன ஆகிறது ? ஒரு மணி நேரம் மொத்த தேர்தல் பணிகளும் ஸ்தம்பிக்கிறது.
நீங்கள் அப்படி செய்யாமல் ஒவ்வொரு சென்டரிலும் தனி பூத் வைத்து கொரோனா நோயாளிகள் எந்த நேரம் வேண்டுமானாலும், நீங்கள் யாரை பட்டியல் போடுகிறீர்களோ அந்தப் பட்டியல் வேண்டும். கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மற்றவர்களுக்கும் பட்டியல் இருக்கு. அந்த பட்டியலில் இருப்பவர் தான் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர். அந்த பட்டியல் வேண்டும். அதை நீங்கள் தனியாக பிரித்து பட்டியல் போட்டு, ஒரு பூத்ல உட்காருங்க, அவர்களை முழுநேரமும் வாக்களிக்க வாய்ப்பு கொடுங்கள்.
7மணியில் இருந்து 5 மணிக்குள் முடிக்க வேண்டும் என்ற பல்வேறு தகவல்களை சொல்லி இருக்கிறோம். வாக்காளர்கள் வாக்களிக்கும் போது போதிய அடிப்படை வசதிகள் நிறைய இல்லை. பாத்ரூம் இல்லை குடிநீர் வசதி இல்லை இந்த மாதிரி பல பிரச்சனைகளை சொல்லியிருக்கிறோம். எல்லாமே குறித்துக்கொண்டு நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment