Latest News

  

காவிரி மேலாண்மை வாரியம்! -மத்திய அரசை மிரட்டும் புதுச்சேரி முதல்வர்

``காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால், உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்" என்று மத்திய அரசை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி சட்டமன்றத்தில், இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, "முழு அதிகாரத்துடன் கூடியதாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று ஆணையம் ஆகியவற்றை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்றுடன் அந்தக் கெடு முடிவடைந்த நிலையில், ஒழுங்காற்றுக் குழுவோ அல்லது மேலாண்மை வாரியமோ எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இது தொடர்பாக பிரதமருக்கு இரண்டு முறை கடிதம் எழுதியுள்ளோம். அதேபோல, பிரதமர் புதுச்சேரி வந்தபோதும் நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தினோம். அதற்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.

உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். இதில், எக்காரணம் கொண்டும் புதுச்சேரி அரசு பின்வாங்காது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க என அனைவரும் ஒன்றிணைந்து சட்டமன்றத்தில் ஏக மனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால், அப்போதுகூட என்.ஆர்.காங்கிரஸ் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தது. மக்கள் நலனில் எவ்வித அக்கறையும் கொள்ளாமலும், சரியான எதிர்க்கட்சியாகச் செயல்படாமலும் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் பகல் கனவு கண்டுகொண்டிருக்கின்றனர்" என்றார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.