திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக சுஜீத் குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவர் பொறுப்பேற்றதும் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் திருச்சி மாவட்டத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்துவது, சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் (மணல் திருட்டு, சட்டவிரோமான அரசு மதுபான விற்பனை, கஞ்சா, குட்கா, லாட்டரி மற்றும் சூதாட்டம்) மற்றும் நில அபகரிப்பு குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தும் விதமாகச் சாலை விதிமுறைகளை மீறுவோர் மீது மோட்டார் வாகன வழக்குகளை அதிகளவில் பதிவு செய்யவும், குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தும் நபர்களுடைய வாகன ஓட்டுநர் உரிமத்தை ரத்துசெய்யவும் காவல் அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். சைபர் குற்றங்கள் மற்றும் இணைய வழி வங்கி மோசடி ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அனைத்து அலுவலர்களுக்கும் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுவதிலும், குற்றத்தை கட்டுப்படுத்துவதிலும், பொதுமக்களுடன் இணக்கமான முறையில் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment