Latest News

இனி தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி ! அதிரடி உத்தரவு !!

 இனி தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி ! அதிரடி உத்தரவு !!

மக்கள் கூடும் இடங்களில் தடுப்பூசி செலுத்தியது குறித்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரியளவில் குறைந்துள்ளது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இதனால் தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணியில் வேகம் காட்டி வருகிறது. தமிழகத்தில் வாரந்தோறும் சிறப்பு முகாம் நடத்தி அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது.
இதற்கு அடுத்தக்கட்டமாக தற்போது வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வாரத்திற்கு இரண்டு நாட்கள் தடுப்பூசி முகாமை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி அளிக்கப்படும் என தமிழக பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

  • தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என்பதை பள்ளி, கல்லூரி, கடைகள், சந்தைகள், தெருக்களில் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், கடை ஊழியர்கள், தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுரை விடுத்துள்ளது.
  • மக்கள் கூடும் இடங்களில் தடுப்பூசி செலுத்தியது குறித்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
திரையரங்குகள், இதர பொழுது போக்கு இடங்கள், விளையாட்டு மைதாங்களில் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.