அன்புடையீர் : அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இந்த குழுமத்தின் நோக்கம் மற்றும் சேவைகள்….
ஒன்றுபடுவோம்… செயல்படுவோம்...
கடந்த 1921ம் ஆண்டு துவங்கப்பட்ட நூற்றாண்டு விழா காணும் மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பழமை மாறாத கட்டடத்தில் பிரதான வகுப்பறைகளுடன் இன்றளவும் செயல்பட்டு வருகின்றது.
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் நம் பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் எட்டு ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். 53 மாணவர்கள் 82 மாணவிகள் என மொத்தம் 135 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் படித்து முடித்த முன்னாள் மாணவர்கள் இப்போது வெளிநாடுகளிலும் மற்றும் உள்நாட்டிலும் பல்வேறு இடங்களில் உயர்ந்த பணிகளில் இருந்து வருகிறோம்.
வரலாற்றுப் பெருமைக்குரிய நூறு வருட பாராம்பரியம் கொண்ட நமது பள்ளிக்கூடம் 12 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்த எல்லா வசதிகளும் இருந்தும் தற்போது வரை தரவுயர்வு பெற முடியாமல் போவதற்க்கு மாணவர்களின் சேர்க்கையின் மிகப்பெரும் வீழ்ச்சியே முக்கிய காரணம்.
இனியும் இந்த நிலை தொடராமல் இருக்க முஹல்லாவாசிகளும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும், முன்னாள் கவுன்சிலர்களும், முன்னாள் மாணவர்களும், கட்டாயம் நமது பள்ளியின் மாணவர்கள் சேர்க்கை விசயத்தில் உதவ அனைவரும முன்வரவேண்டும்.
அரசும், சம்பந்தப்பட்ட கல்வி அலுவலர்களும், அதிரை பேரூர் நிர்வாகமும், முஹல்லாவாசிகளும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும், பகுதி கவுன்சிலர்களும், முன்னாள் மாணவர்களும் கட்டாயம் இப்பள்ளியின் மறுமலர்ச்சிக்கு மாற்றுத்தீர்வு காண முன்வர வேண்டும். அல்லாஹ் நம்மனைவரையும் இந்நற்பணியில் ஒன்றிணைப்பானாக!
நம் பள்ளியின் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கான எண்ணமும் ஆசையுமுண்டு ஆனால் தற்போது மோசமான கொரோனா காலகட்டமாக இருப்பதால் ஒன்றுகூடல் என்பது சாத்தியம் இல்லை என்பதால், நம் பள்ளியில் பயின்ற மேலத்தெரு, கீழத்தெரு, நெசவுத் தெரு, பிலால் நகர், முத்தம்மாள் தெரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சார்ந்த முன்னாள் மாணவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து நம் பள்ளியின் நூற்றாண்டு விழாவை பள்ளி தலைமை ஆசிரியர், மேற்கண்ட தெருக்களின் தலைவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோர்களை ZOOM காணொலி மூலம் ஒன்றுகூட்டி நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டம் நடத்தலாம் என எண்ணுகிறோம்.
இந்த வாட்சாப் குழுமமும் அதற்காகவே தொடங்கப்பட்டு 100வது வருட நிறைவை மிகச்சிறப்பாக கொண்டாடுவது குறித்து உங்களின் மேலான கருத்துக்களை பெற்று நூற்றாண்டு விழா சிறப்பாக ஒருங்கிணைக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.
அனைவரும் இக்குழுமத்தின் நோக்கம் நிறைவேற முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறோம்.
இந்த வாட்ஸப் குருப்பில் இணைய இதை சொடுக்கவும்.
https://chat.whatsapp.com/B8JCeDml9pTFvnzqyXLYCD
நன்றியுடன்....
முன்னாள் மாணவர்கள் குழு
மேலும் தகவலுக்கு
நெ.முகமது மாலிக்
0097150 7914780
No comments:
Post a Comment