மது விலக்கு கோரியும், மார்த்தாண்டத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரியும், செல்பேன் டவர் மீது ஏறி போராடிய போது, உயிரிழந்த சசி பெருமாள் குடும்பத்திற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் 5 லட்ச ரூபாய் நிதியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வழங்கினார். சேலத்தில் மறைந்த காந்தியவாதி சசிபெருமாள் நினைவிடத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் சசிபெருமாள் குடும்பத்தாரிடம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ராகுல் காந்தி அனுப்பிய இரங்கல் செய்தியையும் வழங்கினார். மேலும், சசிபெருமாள் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவியும் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
No comments:
Post a Comment