ராமநாதபுரம் அருகே கடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை, தனது மனைவியையும் வீட்டை விட்டே விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த ரமேஷ், பஜார் பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறார். இவர் சரண்யா என்பவரை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்த நிலையில், தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
பலரிடமும் ரமேஷ் கடன் வாங்கிய நிலையில், சரண்யாவுக்கு சொந்தமான 90 சவரன் நகைகளை வாங்கி விற்றதோடு தனது மகனை அடமானம் வைத்து ரமேஷ் பணம் வாங்கியுள்ளார். மனம் நொந்த சரண்யா, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய சரண்யாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டையும் கடன் தொல்லை காரணமாக கணவர் ரமேஷ் விற்றுவிட்டது தெரியவந்தது. தான் நடத்தி வந்த கடையை ரமேஷ் வேறு ஒருவருக்கு விற்பனை செய்ய முயன்ற நிலையில், மனைவியை சரமாரியாகத் தாக்கி வீட்டை விட்டே துரத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் சரண்யா பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் குடிபுகுந்துள்ளார். தனக்கு நீதி கிடைக்கும்வரை கோயிலிலிருந்து வெளியேறப் போவதில்லை எனவும் உறுதியாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.
No comments:
Post a Comment