சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை ஒட்டி தேர்தலுக்கான புதிய டிஜிபியாக கே.பி.மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக கரன் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு மே 16ம் தேதி நடைபெற உள்ளது இதனை முன்னிட்டு சட்டம் ஒழுங்கு டிஜிபி, உளவுத்துறை டிஜிபி, மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்களை புதிதாக நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பாதுகாப்பு தொடர்பான பணிகளை புதிய டிஜிபி கே.பி. மகேந்திரன் மேற்கொள்வார் என்றும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கே.பி. மகேந்திரன் கீழ் பணியாற்றுவார்கள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக கரன் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
கரூர், திருவண்ணாமலை, திருவாரூர், நெல்லை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியராக காக்கர்லா உஷாவும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராஜா பூஜா குல்கர்ஷியும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியராக வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியராக சமயமூர்த்தியும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக சொர்ணாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை, திருவாரூர் மாவட்ட எஸ்.பி.க்கள் இருவர் மாற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் அன்புநாதனுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பணம் பறிமுதல் சர்ச்சையால் கரூர் மாவட்ட ஆட்சியரை தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment