கோவை வழியாக பல முறை கொட நாடு சென்ற ஜெயலலிதா ஒரு முறையாவது,இந்த கொங்கு மண்டல தொழிலதிபர்களை அழைத்து ஜெயலலிதா பேசியதுண்டா? என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். 5 ஆண்டுகால ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் இருண்டகாலமாக இருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டிய ஸ்டாலின் மீண்டும் வாக்களித்தால் தமிழகம் கற்காலமாக மாறிவிடும் என்றும் தெரிவித்தார். கோவையில் ஸ்டாலின் கேள்வி மூன்றாம் கட்ட பிரச்சார பயணத்தை கோவையில் தொடங்கிய ஸ்டாலின்,திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார், அப்போது பேசிய அவர், தி.மு.க. ஆட்சி காலத்தில் "கமிஷன், கரெப்ஷன்" இன்றி தொழில் தொடங்க அனுமதிகள் கொடுக்கப்பட்டன என்றார். தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் வர வேண்டும்,இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே தலைவர் கலைஞரின் நோக்கமாக இருந்தது,அதனால், தமிழகம் தி.மு.க. ஆட்சி காலத்தில் 'ஜொலிக்கும் நட்சத்திரம்' ஆகத் திகழ்ந்ததாக குறிப்பிட்டார். இன்றைக்கு மற்ற மாநில முதல்வர்கள் தமிழகத்திற்கு வந்து நம் தொழிலதிபர்களை தங்கள் மாநிலங்களில் தொழில் தொடங்க அழைக்கிறார்கள். மத்திய பிரதேச முதல்வர் சவுகான் வந்துவிட்டார். கர்நாடக முதல்வர் சித்தாராமையை வந்து விட்டார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வந்து விட்டார் என்றார். .தமிழகத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதா எத்தனை முறை இந்த வழியாக கொடநாடு போயிருப்பார்? .தன் முதலமைச்சர் அலுவலகத்தையே கொடநாட்டில் வைத்து எத்தனை நாள் செயல்பட்டிருப்பார்? .என்றைக்காவது ஒரு நாள் இந்த கோவை தொழிலதிபர்களை இந்த கொங்கு மண்டல தொழிலதிபர்களை அழைத்து ஜெயலலிதா பேசியதுண்டா? என்றும் கேள்வி எழுப்பினார்.
இருண்டகாலம் அதிமுக ஆட்சியில் இந்த ஐந்தாண்டு காலம் "தொழில்துறையின் இருண்ட காலம்". தமிழக முன்னேற்றத்தின் "கற்காலம்". இனியொரு முறை ஜெயலலிதாவிற்கு வாய்ப்பு கொடுத்தால், இருக்கின்ற தொழிற்சாலைகளும் மூடப்படும் அபாயம் உருவாகி விடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.பொய்யே... பொய்யே... புலவர் சொல்வதும் பொய்யே, ஜெயலலிதா சொல்வதும் பொய்யே என மு.க.ஸ்டாலின் பாட்டுப்பாடி பிரசாரம் செய்தார். இங்கு கூடியிருந்த கழக தோழர்களும், கூட்டணி கட்சியினரும் இந்த உற்சாகத்தையும், எழுச்சியையும் வரும் மே 16ந்தேதி தேர்தலில் காட்ட வேண்டும். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. என்ற பாடலை அவர் பாடும் போது கூடியிருந்த அனைவரும் உற்சாக குரல் எழுப்பினர்.
பாட்டு பாடி பிரச்சாரம் புலவர் சொன்னதும் பொய்யே.. இந்த ஜெயலலிதா சொல்வதும் பொய்யே..என்று பாடி வாக்காளர்களையும் பதிலுக்கு பாட வைத்தார். கெட்டிக்காரன் புளுகு 8 நாளைக்கு தாங்காது என்று சொல்வார்களே, அதுபோல ஜெயலலிதாவின் புளுகு 8 மணி நேரம் கூட நிலைக்கவில்லை. என்றும் ஸ்டாலின் கூறினார்.கோவையில் தொழிற்சாலைகள் சிங்காநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக்கை ஆதரித்து சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகில் பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சி காலத்தில் அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. இதன் மூலம் தொழிலாளர்களுக்கு பெருமளவு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது என்றார்.
கரெப்சன் இல்லாத மாநிலம் அப்போதைய முதல்வர் கருணாநிதியையும், அமைச்சராக இருந்த என்னையும் எப்போது வேண்டுமானாலும் நேரில் சந்திக்க வாய்ப்பு இருந்தது. கலெக்ஷன், கரெப்ஷன், கமிஷன் இல்லாமல் தொழில் துவங்க அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் பல்வேறு மாநிலங்கள், ஏன் பல்வேறு நாடுகளில் இருந்து கூட தொழிற்சாலைகளை தொடங்க தமிழ்நாட்டை தேர்வு செய்தனர்.தொழில் தொடங்கலையே நான்கு ஆண்டுகளில் ஒரு புதிய தொழிற்சாலை கூட கோவையில் கொண்டு வரப்படவில்லை. இவ்வளவு ஏன், தமிழகம் முழுவதிலுமே ஒரு தொழிற்சாலையாவது திறக்கப்பட்டதா, மேலும் புதிய தொழில் கொள்கையை ஜெயலலிதா அறிவித்தார். இதன் படி, 2016ம் ஆண்டில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று கூறினார் அது நடந்ததா? என்று கேட்டார்.ஜெயலலிதா செய்தாரா? தேர்தல் பிரசாரத்தின் போது அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டதாக ஜெயலலிதா கூறி வருகிறார். கோவையில் மோனா ரயில் கொண்டு வரப்படும் என்றார். அவர் கூறியபடி எங்காவது மோனோ ரயிலை ஓட விட்டார்களா, விவசாயிகளின் தனிநபர் வருமானம் 2 மடங்காக உயரும் என்றார். செய்தாரா என்று கேட்டார்.
முதலீட்டாளர் மாநாடு ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டம் ஏட்டு சுரைக்காயாகவே உள்ளது. நான்கு ஆண்டுகள் கழித்து ஆட்சி முடியும் தருவாயில் உலக முதலீட்டாளர் மாநாடு கூட்டினார். அது அதிமுகவின் பொதுக்குழுவாகவே காணப்பட்டது. இம்மாநாட்டுக்கு பிறகு 2.42 லட்சம் கோடி முதலீடு வந்துள்ளதாகவும், 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.வேலை கிடைத்ததா? விண்ணப்பித்து 30 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. ஏழு மாதங்கள் முடிந்து விட்டது. ஒரே ஒரு தொழிற்சாலை துவங்குவதற்காவது முயற்சி எடுத்திருப்பார்களா, ஒருவருக்காவது வேலை கிடைத்துள்ளதா.110 விதி அறிவிப்பு 110 விதி என்பது தீ விபத்து, ரயில் விபத்து உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் முதல்வரோ அல்லது அமைச்சரோ அறிவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. காமராஜர், ராஜாஜி, பக்தவச்சலம், அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி என அனைவரும் அப்படித்தான் பயன்படுத்தி வந்தனர். ஜெயலலிதா 110 விதியை மக்களை ஏமாற்றும் விதிமுறையாக கடைபிடித்து வருகிறார் என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்
No comments:
Post a Comment