தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கம் (TIYA) மற்றும் தாஜுல் இஸ்லாம் சங்கம் சார்பாக நமது மேலத்தெரு முஹல்லாவாசிகள் அனைவருக்கும்
*நன்றி...!!! நன்றி..!!! நன்றி...!!! *
வல்ல அல்லாஹ்வை வணங்கி வாழ்வோம்.
இல்லாதோருக்கு வழங்கி வாழ்வோம்.
எல்லோருடனும் இணங்கி வாழ்வோம்.
புனித மிக்க ரமலான் மாதத்தில் அதிகமதிக நன்மைகளை நாடி தாராளமாக TIYAவிற்க்கு வழங்கி ஷரீஅத் வழியில் தங்கள் ஃபித்ரா சென்றடைய உதவிடுவீர் என்கிற TIYAவின் வேண்டுகோளை ஏற்று வழங்கிய உள்ளங்களுக்கு
ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா
தாங்கள் குறிப்பிட்டு வழங்கிய தொகை அதே வழியில் தகுதியுடையவர்களுக்கு தாயகத்தில் வழங்கப்பட்டு விட்டது.
நமது அரசாங்க வழிகாட்டுதலின் படி கோவிட் முன்னெச்சரிக்கை லாக்டவுன் அமலில் இருந்து வரும் காரணத்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகவே இந்த வருடம் கீழ்க்கண்ட பொருட்கள் ஃபித்ராவாக விநியோகிக்கப்பட்டது.
மளிகை பொருட்கள்
1. அரிசி 5kg
2. சீனி 1 கிலோ
3. சேமியா ஒரு பட்டை
4. கடல்பாசி 10 கிராம்
5. மசாலா 100 கிராம்
6. முந்திரி,திராட்சை, ஏலம்
7. எண்ணெய் 1/2 லிட்டர்
8. பணமாக ரூ 500/-
மொத்தம் 137 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
அருளாளன் அல்லாஹ் தங்களின் தூய எண்ணங்களை ஏற்று எல்லா நற்பாக்கியங்களையும் வழங்க பிராத்திக்கின்றோம்.
அமீரக TIYA மூலம் ரூ. 113,000 (ஒரு இலட்சத்து பதிமூன்றாயிரம்) மற்றும் குவைத் வாழ் ஒரு சகோதரர் மூலம் ரூ. 10,000 (பத்தாயிரம்) ஆக மொத்தம் ரூ.123,000 (ஒரு இலட்சத்து இருபத்து மூவாயிரம்) வசூல் செய்யப்பட்டது. இதில் 137 குடும்பங்கள் பயனடைந்தனர்.
இதை நமது முஹல்லாவில் ஆராவாரமின்றி விநியோகித்த தாயக TIYA நிர்வாகிகள் மற்று தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளுக்கும், இளைஞர்களுக்கும், அன்பர்களுக்கும், அமீரக TIYA நிர்வாகிகளுக்கும், ஃபித்ரா தொகையினை வழங்கிய அமீரக மற்றும் குவைத் வாழ் நல் உள்ளங்களுக்கும் அல்லாஹ்வின் பேரருள் என்றும் சூழ தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கம் (TIYA) மற்றும் தாஜுல் இஸ்லாம் சங்கம் சார்பாக பிராத்திக்கின்றோம் மற்றும் தாங்களும் பிராத்திக்க வேண்டுகிறோம்.
என்றும் அன்புடன்
தலைவர் மற்றும் நிர்வாகிகள்
தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கம் (TIYA)
No comments:
Post a Comment