
சென்னை: கட்டாயக் கல்வி உரிமை சட்டடத்தின் கீழ் பள்ளிகளில் இருக்கும் இடங்களை வேறு மாணவர்களைக் கொண்டு நிரப்பக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
தனியார் பள்ளிகளில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இருக்கும் மொத்த இடங்களில், காலியாக உள்ள இடங்கள் எத்தனை என்ற விவரத்தை பள்ளிக் கல்வித் துறை வெளியிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% மாணாக்கர் சேர்க்கை இடங்களை நிரப்புவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கட்டாய கல்வி உரிமைகள் சட்ட இடங்களில் வேறு மாணவர்களை நிரப்பக் கூடாது என்றும், காலியாக இருக்கும் இடங்களின் விவரங்களை பள்ளிவாரியாக வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment