நேற்று (03-02-2012) துபாயில் TIYA வின் பொதுக்குழுக் கூட்டம் அதன் துபாய் தலைவர் சகோ. B. ஜமாலுதீன் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் மேலத்தெரு முஹல்லாவாசிகள் முன்னெப்பொழுதுமில்லாத அளவிற்கு கடுங்குளிரையும் பொருட்படுத்தாது பெருமளவில் கலந்துக் கொண்டனர்.
இக்கூட்டத்தில் மேலத்தெரு முஹல்லாவிற்குட்பட்ட 16 மற்றும் 17ஆவது வார்டு உறுப்பினர்கள் தங்கள் வார்டுக்கு செய்த, செய்ய வேண்டிய பணிகள் குறித்து பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் எடுத்துரைத்ததை கடிதம் வாயிலாக TIYAவிற்கு அனுப்பியதை நமது முஹல்லாவாசிகள் அனைவருக்கும் வாசித்துக் காண்பிக்கப்பட்டது.
முஹல்லாவாசிகள் அனைவரும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இவர்களின் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டோர்களின் புகைப்படங்கள்
“ TIYA “ வின் சேவைகள் தொடர என் வாழ்த்துகள் !
ReplyDelete