திமுக தலைவர் கருணாநிதி குறித்து தனிப்பட்ட முறையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்ததில் தனக்கு உடன்பாடு இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று சென்னையில் உள்ள மதிமுக கட்சி தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கருணாநிதி குறித்து வைகோ சரமாரியாக விமர்சனம் செய்து பேசினார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திருமாவளவன், தேமுதிகவில் பிளவை ஏற்படுத்தும் திமுகவின் முயற்சி மக்கள் நலக் கூட்டணிக்கு எதிரானது என்று குற்றம்சாட்டினார். மேலும் திமுக தலைவர் கருணாநிதியை பற்றி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறிய கருத்து பற்றி, தனிநபர் விமர்சனத்தில் தமக்கு உடன்பாடில்லை என்றும் ஒருவரை ஜாதி ரீதியாக விமர்சிப்பது தேவையற்ற செயல் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment