அமைச்சர் ஜெயக்குமார் உலக மேதைகளில் ஒருவர் என்று ஜாமீனில் இருந்து வெளியே வந்துள்ள டிடிவி தினகரன் நக்கல் அடித்துள்ளார்.
இரட்டை
இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரன் கைது
செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அவர் மீது அதிருப்தியில்
இருந்த அமைச்சர்கள் வாய்க்கு வந்தபடி பேசினர். அதிலும் அமைச்சர்
ஜெயக்குமார் தான் ஹைலைட்.
இரு அணிகளும் இணைய பேச்சுவார்த்தை நடந்த போது கட்சியின் நலன் கருதி
தினகரனையும் சசிகலாவையும் கட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்
ஜெயக்குமார் தெரிவித்தார். இதனால் தினகரனுக்கு அவர் மீது கடும் கோபம்
ஏற்பட்டது.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் தினகரனுக்கு ஜாமீன்
கிடைத்தது. இதனால் தினகரன் நேற்று சென்னை திரும்பினார். அதிமுகவின்
அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆர் பத்திரிகையில் மாட்டிறைச்சிகான தடை
குறித்தும் மத்திய அரசின் 3 ஆண்டு நிறைவு தொடர்பாக விமர்சனங்கள்
இடம்பெற்றது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது நமது எம்ஜிஆரில்
வந்துள்ள தகவல் அதிமுகவின் தகவல் அல்ல என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில்,
ஜெயக்குமார் உலக மேதைகளில் ஒருவர். அவர் கூறும் கருத்துகளுக்கெல்லாம்
என்னால் பதில் கூறமுடியாது. அவர் கூறும் கருத்துகளுக்கு பதில் சொல்லும்
தகுதி எனக்கு இல்லை.
அவருடைய தகவல்களுக்கு அவருடைய உயரத்தில் உள்ளவர்கள் மட்டுமே பதில் அளிக்க
முடியும். அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் இருந்து சசிகலாவின் பேனர்கள்
அகற்றப்பட்டது உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கு காலம் பதில் சொல்லும்
என்றார் அவர்.
No comments:
Post a Comment