கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு கனிமொழி ட்விட்டரில் வெளியிட்ட
கவிதை திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் நீண்டகாலமாக கனிமொழி ஓரம்கட்டப்பட்டு வந்தார். அதேநேரத்தில்
பிரதமர் மோடி, கருணாநிதி தொடர்பாக கனிமொழியிடம் தொடர்ந்து விசாரித்து
வந்தார்.
ஒருகட்டத்தில் திமுக திடீரென பாஜகவுக்கு எதிராக கடும் நிலைப்பாட்டை
மேற்கொள்ள தொடங்கியது. அதேநேரத்தில் கனிமொழிக்கும் முக்கியத்துவம்
கொடுத்தது.
ஆடுபுலி ஆட்டம்
கருணாநிதியின் வைரவிழாவுக்கு தேசிய தலைவர்களை அழைப்பதில் கனிமொழி
மும்முரமாக இருந்தார். இப்படி முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிலையில்
திடீரென ஓரமும் கட்டப்பட்டார் கனிமொழி.
அதிர்ந்த கனிமொழி
இந்த ஆடுபுலி ஆட்டத்தால் அதிர்ச்சியடைந்து போனார் கனிமொழி. இதன்
உச்சமாகத்தான் கருணாநிதிக்கான பிறந்த நாள் வாழ்த்து கவிதையில் குமுறி
கொட்டியிருக்கிறார் கனிமொழி.
ட்விட்டரில் ஆவேசம்
அதுவும் வைரவிழா மேடையில் கனிமொழி அமர்ந்திருந்த நேரத்தில் அவரது ட்விட்டர்
பக்கத்தில் இக்கவிதை வெளியானது. கருணாநிதியின் உடல்நலம், தற்போதைய திமுக
நிலைமை, திமுகவில் தாம் ஓரம்கட்டப்பட்டிருப்பது என அனைத்தையும்
அக்கவிதையில் கனிமொழி வெளிப்படுத்தியிருக்கிறார்.
சலசலப்பு
இந்த கவிதை திமுகவில் புதிய கலகக் குரலாய் வெடித்துள்ளது. திமுகவில்
இப்போது கனிமொழியின் கவிதை மீதுதான் பரபர விவாதம் நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment