டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டுள்ளார். இதில் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் யாருக்கும் தேசிய பொறுப்பு வழங்கப்படவில்லை. பாஜகவின் தேசிய செயலாளராக இருந்த ஹெச். ராஜாவுக்கு மீண்டும் அப்பதவியும் வழங்கவில்லை.
பாரதிய ஜனதா கட்சியின் 12 துணைத் தலைவர்கள், 23 செய்தித் தொடர்பாளர்கள் உட்பட 70 தேசிய அளவிலான நிர்வாகிகள் பட்டியலை ஜேபி ந்நட்டா இன்று வெளியிட்டார். இதில்தான் தமிழக பாஜக தலைவர்கள் யாருடைய பெயரும் இடம்பெறவில்லை.
அத்துடன் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளராக இருந்த முரளிதர் ராவ் அதில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் இந்த பட்டியலில் ஏற்கனவே தேசிய செயலாளர் பொறுப்பில் இருந்த் எச். ராஜாவின் பெயரும் கூட இல்லை. இதனால் தமிழக பாஜகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
source: oneindia.com

No comments:
Post a Comment