
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்குத் தகுதியானவர் என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
2004ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக இரண்டு முறை நாட்டின் பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் இன்று தனது 88வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவர் பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதால், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பல பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
மன்மோகன்சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரம் தனது சுட்டுரைப்பதிவில், "மொத்த நாடும் அவரின் வாழ்வு மற்றும் சேவைக்காக பெருமைப்படுகிறது. நாட்டின் ஒவ்வொரு இளைஞர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரி" எனக் குறிப்பிட்டு தனது வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டுள்ளார்.
மேலும், "பொதுவாழ்வில் உள்ள ஒருவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றால் மன்மோகன் சிங் சந்தேகமில்லாமல் அதனைப் பெறத் தகுதியானவர்." எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment