வேலூர் நாட்றாம்பள்ளிக்கு அருகில் உள்ள தென்னசி மேடு என்னும்
பகுதியில் ஆட்டோவும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 3
பேர் பலியாகினார். இச்சம்பவத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வேலூரில் உள்ளது நாட்றாம்பள்ளி என்னும் ஊர். நாட்றாம்பள்ளியை அடுத்த
தென்னசிமேடு என்னும் பகுதியில் ஆட்டோவும் பைக்கும் நேருக்கு நேர்
மோதிக்கொண்டதில் 9 பேர் பலத்த காயமடைந்தனர்.
இந்த விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அவசர ஊர்திக்கு தொலைபேசி
மூலம் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவசர ஊர்தி மூலம் விபத்தில்
காயமடைந்தவர்களை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி, ஒரு சிறுமி உள்பட மூவர் மரணம் அடைந்தனர். இதனால்
அப்பகுதியே சோகமயமாகக் காட்சியளிக்கிறது. போலீசார் வழக்குப் பதிவு செய்து
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment