இரு அணிகள் இணைய 2 மாதம் அவகாசம் வழங்குமாறு சசிகலா அறிவுரை கூறியதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 2 மாதத்துக்குப் பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
திஹார் சிறையில் இருந்து வெளியே வந்த கையோடு பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறைக்கு சென்ற டிடிவி தினகரன் சசிகலாவை இன்று சந்தித்தார்.தினகரனுடன் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் சென்றிருந்தனர்.
அப்போது கட்சி நிலவரம் குறித்து சசிகலாவுடன் ஆலோசித்ததாக தெரிகிறது. இதைத்தெடர்ந்து சசிகலாவுடனான சந்திப்புக்கு பிறகு டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
60 நாட்கள் அவகாசம் அப்போது, இரு அணிகள் இணைய 60 நாட்கள் அவகாசம் வழங்குமாறு சசிகலா அறிவுரை கூறியதாக டிடிவி தினகரன் தெரிவிததார். 2 மாதத்துக்கு பிறகு அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
எந்த முன்னேற்றமும் இல்லை 45 நாட்கள் ஒதுங்கியிருந்தும் அணிகள் இணைவதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் தினகரன் கூறினார். இரு அணிகள் இணைப்பு பற்றி மாறுபட்ட கருத்துகளை அமைச்சர்கள் கூறுகின்றனர் என்றும் தினகரன் குற்றம்சாட்டினார்.
2 மாதத்துக்குப் பிறகு மீண்டும் 2 மாதத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனில் மீண்டும் கட்சிப் பணியை தொடங்குவேன் என்றும் டிடிவி தினகரன் கூறினார். என்னைப் பார்த்து சுய பயத்தால் ஜெயக்குமார் ஒதுக்கி வைப்பதாக அறிவித்திருக்கிறார் என்றும் அவர் கூறினார்.
யாருக்கும் அதிகாரமில்லை மேலும் தன்னை கட்சியில் இருந்து நீக்க யாருக்கும் அதிகாரமில்லை என்றும் டிடிவி தினகரன் கூறினார். கட்சியில் இருந்து என்னை நீக்க பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்றும் தினகரன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment