குடும்பக் கட்டுபாடு திட்டத்தின் அவசியத்தை இஸ்லாமியர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் வெளியான தலையங்கம் இவ்வாறு கூறியுள்ளது. இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஹிந்துக்கள் தங்கள் மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற ஹிந்து அமைப்புகளின் கோரிக்கை இதற்கு தீர்வாகாது என்று தெரிவித்துள்ள சாம்னா நாட்டின் சட்ட திட்டத்தை அனைவருக்கும் பொதுவானதாக உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது.
2001-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் நாட்டில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள சிவசேனா இதனால் உணர்வு ரீதியில் மக்களிடம் சமமற்ற நிலை தோன்றி நாட்டின் ஒற்றுமைக்கே பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று எச்சரித்துள்ளது. லோக்பால் சட்டத்தை விட பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதே இதற்கு வழி என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு குடும்ப கட்டுபாடு திட்டத்தின் அவசியத்தை இஸ்லாமியர்ககளுக்கு உணர்த்த வேண்டும் என்று அதில் கேட்டுக்கோள்ளப்பட்டுள்ளது. சிவசேனா ஏட்டின் இந்த தலையங்கம் புதிய சர்ச்சைக்கு வழி கோரியுள்ளது
No comments:
Post a Comment