டிஜிட்டல் அரசாங்கம்’ (Digital Government) என்ன விதத்தில், ஐக்கிய துபாய், அரபு அமீரகம் உலக அளவில் 3-வது இடத்தில் உள்ளது என சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வு தெரிவித்துள்ளது.
அத்துடன் மக்களுக்கு திருப்தியை ஏற்படுத்திய ‘டிஜிட்டல் அரசு’ பணிகளில், ஆய்வு செய்யப்பட்ட 10 நாடுகளில், 1-வது இடத்தையும் பிடித்துள்ளது, துபாய், ஐக்கிய அரபு அமீரகம்.
அரசு பணிகள், அரசு பொதுமக்களுக்காக வழங்கும் சேவை, மற்றும் அரசு நிர்வாகம் ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் (கம்ப்யூட்டர்கள் மூலம்) செய்வதையே, ‘டிஜிட்டல் அரசாங்கம்’ என்பார்கள். இதில் ஓவர்-ஆல் கணிப்பில் ஐக்கிய அரபு அமீரகம் உலக அளவில் 3-வது இடத்தில் உள்ளது.
அமீரகத்தை விட திறமையான டிஜிட்டல் அரசாங்கம் நடத்தும் இரு நாடுகளும், சிங்கப்பூர், நார்வே ஆகியவை.
உலக அளவில் மொத்தம் 10 நாடுகளில் இந்த ஆய்வு செய்யப்பட்டது. பிரேசில், ஜெர்மனி, இந்தியா, நார்வே, சிங்கப்பூர், தென் கொரியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளே, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இந்தியாவிற்கு 8 இடம் கிடைத்துள்ளது.
கடந்த 6 மாதங்களாக செய்யப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டதை அடுத்து, அதில் தமக்கு கிடைத்த இடம் பற்றிய தகவலை கடந்த வாரம் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது துபாய், ஐக்கிய அரபு அமீரகம்.
No comments:
Post a Comment