கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4 வது அணு உலைகள் விரைவில் நிறுவப்படும் என்று அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் கூறியுள்ளார். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியில் தலா 1000 மெகா வாட் மின் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் குடியரசுத் தினவிழாவை யொட்டி கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறுகையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாம் அணு உலையில் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்து, இப்போது மீண்டும் மின் உறபத்திக்கு அணு உலை தயாராக உள்ளது. இன்னும் 3 நாட்களில் மின் உற்பத்தி துவங்கப்படும் என்றும் கூறினார். மேலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4 வது அணு உலைகள் அமைக்க, தேசிய அணுமின் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. 2 -வது அணு உலையில் 4 மாதத்தில் எரிபொருள் நிரப்பும் பணி துவக்கப்படும். 3 மற்றும் 4 வது அணு உலைகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.
No comments:
Post a Comment