அதிரை மின் வாரியத்தில் பணிபுரிந்து மின் விபத்தால் மரணமடைந்த நமது சகோதரர் ஜாகிர் ஹுசைன் அவர்களின் குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளதை கவனத்தில் கொண்டு இந்த குடும்பத்திற்கு வேறு வருமானங்கள் ஏதும் இல்லாததை சுட்டி காட்டி இருந்தனர்.
(இது பற்றி சேர்மன் அவர்களின் காணொளி யையும் நமது தளத்தில் பதிந்திருந்தோம்) அதிரை நகர் சேர்மனும் SDPIயும் இணைந்து நேற்று அதிரை அனைத்து ஜும்மா பள்ளியிலும் துண்டேந்தி வசூல் செய்தனர்.
இதில் ரூபாய் 50,000 த்தை தாண்டியுள்ளது அல்ஹம்துளிலாஹ்..
இருப்பினும் இந்த தொகை அந்த குடும்ப சுமையை ஓரளவு தான் நிவர்த்தி செய்யும் என்பதை கவனத்தில் கொண்டு இன்னும் அதிககதிகம் உதவிகள் செய்து இந்த ஏழைக்குடும்பம் வாழ்விற்கு வழிவகை செய்து கொடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.
ஒரு முஃமின் மற்றொரு முஃமினுக்கு உடலை போன்றவர்கள்.
ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும் அன்பு செலுத்துவதிலும் இறக்கம் காட்டுவதிலும் இறை நம்பிக்கையாளர்கள் ஓர் உடலை போன்றவர்கள் .
உடலின் ஒரு பகுதி சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் உறங்காமல் விளித்து கொண்டிருக்கின்றன அத்துடன் உடல் முழுதும் காய்ச்சல் கண்டு விடுகிறது என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் .-அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல் :புகாரி 6011
ஒரு மனிதனுக்கு காலில் முள் தைத்து விட்டது என்றால் அதன் கைகள் ஓடோடி சென்று அந்த முள்ளை அப்புறபடுத்துவது போன்று இந்த ஜாகிரின் கஷட்டத்தை நினைத்து தங்களால் ஆன உதவிகளை நேரடியாகவும் செய்யலாம்.
நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்
No comments:
Post a Comment