கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 3 கோடி பணம் மற்றும் 125 சவரன் தங்கக் காசுகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஸ்ரீவித்யாமந்திர் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பணம் மற்றும் நகைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து அங்கு அவர்கள் சோதனை நடத்தியதில், ரூ.3 கோடியே 39 லட்சம் பணம், 245 கிராம் மதிப்புள்ள 125 தங்க காசுகள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அம்மாவட்ட தேர்தல் அலுவலர் விஜயகுமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். கைப்பற்றப்பட்ட இந்த பணம் யாருடையது, எதற்காக பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது என்ற கோணத்தில் தேர்தல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment