மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சராக இருந்தபோது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதால், அதைவிட குறைந்த செல்வாக்கு கொண்ட ஜவுளித்துறைக்கு, பிரதமர் மோடியால் மாற்றிவிடப்பட்டார் ஸ்மிருதி இரானி. ஜவுளித்துறை அமைச்சரான பிறகும், செய்திகளில் இடம் பிடிப்பதை தவறவிடுவதில்லை இரானி. இப்படித்தான், டிவிட்டர் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள படம் ஒன்று வைரலாகி வருகிறது.
பின்புறம் சுவாமி படம் மாட்டப்பட்ட ஒரு பேக்ரவுண்டில், நீல வண்ண சேலை உடுத்தி சாந்தமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தபடி இரானி உள்ள படம்தான் இப்படி வைரலாகிறது. இதற்கு காரணம் என்ன தெரியுமா.. #IWearHandloom என்ற டேக்குடன், கைத்தறி ஆடைகளை அணிந்து நாமும் போஸ் கொடுத்து இப்படி போட்டோவை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று இரானி கோரிக்கை விடுத்ததோடு, இதுதான் எனது லுக் என்றும் அதில் சொல்லியுள்ளார். என் புது லுக் எப்படி உள்ளது என கேட்பதை போல உள்ளது அவரது போட்டோ போஸ். அவர் உடுத்தியுள்ள சேலை, பீகார் மாநில கைத்தறி நெசவாளர்களால் உருவாக்கப்பட்டது என்றும் இரானி தெரிவித்துள்ளார். நாமும் கைத்தறி ஆடை அணிந்து போட்டோவை டிவிட்டரில் போட்டு அதை 5 பேருக்காவது டேக் செய்ய வேண்டும் என்பது அமைச்சரின் அவா.
No comments:
Post a Comment