தமிழகத்தில் பாஜகவும், அதிமுகவும் விவசாயிகளுக்கு துரோகம் செய்கின்றன என திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி குற்றம் தெரிவித்துள்ளார். காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை எழும்பூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்த விவசாய சங்கத்தினர் திட்டமிட்டிருந்தனர். இதில் திமுக, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, தமாக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்றன.
திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது வி.பி.துரைசாமி பேசியதாவது :- காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்து சனிக்கிழமை தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு தமிழக அரசும் ஆதரவு தர வேண்டும் என்று சட்டப்பேரவையில் திமுக வலியுறுத்தியது. ஆனால், அதிமுக அரசு அதனை மறுத்துவிட்டு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டோம். அணை கட்டுவதை நிறுத்திவிடுவார்கள் என்று ஒரு பொய்யான தகவலை இன்றைக்கு ஆளுகின்ற முதல்வர் கூறுகிறார். ஆனால் திமுக தலைவர் கலைஞர் இரண்டு முறை மோடியின் கவனத்துக்கு எடுத்துச் செல்கின்ற வகையில் மேகதாது அணையை கட்டுவதை உடளடியாக கட்டுவதை நிறுத்த வேண்டும். முதல் அமைச்சரை அழைத்து பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு, நாடாளுமன்றத்திலும் எங்களுடைய உணர்வுகளை தெரிவித்திருக்கிறோம். மாநிலங்களவையில் எங்களுடைய குழுத் தலைவர் பேசியிருக்கிறார்.
ஆனால் 37 எம்பிக்கள் அதிமுக நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கும் ஓட்டுபோட்டது. தண்ணீர் வரக்கூடாது என்பதற்கும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஆக செயல்படாத இரண்டு அரசுகளையும் நாம் கண்டிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சியைப் பற்றி அதிகமாக மோடி பேசுகிறார். ஆனால் செயல்பாடு குறைவாக இருக்கிறது. யார் செயல்படுகிறார்களோ அவர்களைத்தான் இந்த நாடு ஏற்றுக்கொள்ளும். ஆனால் செயல்படாத மோடி அரசு, கர்நாடக அரசை அழைத்துப் பேசி அணையை கட்டக் கூடாது என்று கூற தவறிவிட்டது. மறுபுரம் விவசாயிகளின் நிலத்தையும் எடுக்கின்றது. அதற்காக அவர்கள் பிறப்பித்த அவசர சட்டம் நேற்றோடு காலக்கெடு ஆகிவிட்டது. தமிழக பா.ஜ.க.வும், அ.தி.மு.கவும் முழு அடைப்பு போராட்டத்தை ஆதரிக்காதது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம். விவசாயிகளை வஞ்சிகின்ற, எதிராக செயல்படுகின்ற மத்திய பாஜக அரசையும், தமிழக அதிமுக அரசையும் 200 சதவிகிதம் அனைத்துக் கட்சிகளும் எதிர்க்க வேண்டும். போராட வேண்டும். உரிமைகளை விவசாயிகளுக்கு பெற்றுத் தர வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment