ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்ட பீச்சர் போன்களின் பேட்டரியுடன் ஒப்பிடும் போது இன்றைய ஸ்மார்ட்போன்களின் பேட்டரி அதிக நேரம் சார்ஜ் வழங்குவதில்லை. ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரிப்பது அதன் பேட்டரியை பாதிக்க வைக்கின்றது என்பது தான் உண்மை.
ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் அதில் அவ்வப்போது சார்ஜ் நீடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் அதிகரித்து கொண்டிருக்கின்றன. இங்கு ஸ்மார்ட்போனில் நீண்ட நேர பேட்டரி பேக்கப் பெற செய்ய வேண்டிய விஷயங்களை தான் தொகுத்திருக்கின்றோம்..
வைப்ரேட் போனில் ரிங்டோன்களை விட வைப்ரேட்கள் அதிக பேட்டரியை பயன்படுத்துகின்றன, முடிந்த வரை வைப்ரேட் ஆப்ஷனை பயன்படுத்தாமல் இருப்பது நல்ல பலன்களை தரும்.
ஸ்கிரீன் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ப்ரைட்னஸை குறைத்து வைக்கலாம், மேலும் போனில் வழங்கப்பட்டிருக்கும் ஆட்டோ ப்ரைட்னஸ் ஆப்ஷனினையும் பயன்படுத்தலாம். இதன் மூலம் பேட்டரி அதிக நேரம் கிடைக்கும்.
டைம் அவுட் ஸ்மார்ட்போனினை பயன்படுத்தி முடித்தவுடன் அதை லாக் செய்ய வேண்டும், அவ்வாறு செய்யும் பழக்கமில்லாதவர்கள் டைம் அவுட் நேரத்தை குறைத்து வைக்க வேண்டும்.
ஸ்விட்ச் ஆஃப் நீண்ட நேரம் பயன்படுத்தாத போது போனினை ஆஃப் செய்து வைக்கலாம். முக்கியமான பேச்சுவார்த்தை அல்லது இரவு நேரங்களில் தூங்கும் போது ஆஃப் செய்து வைக்கலாம்.
பேட்டரி சார்ஜ் ஸ்மார்ட்போனினை சரியாக சார்ஜ் செய்ய வேண்டும், பேட்டரி 10 சதவீதம் குறைந்திருந்தால் உடனே அதை சார்ஜ் செய்ய வேண்டும்.
ஆப்ஸ் பயன்படுத்தாத ஆப்ஸ்களை ஆஃப் செய்து வைக்க வேண்டும்.
ஜிபிஎஸ் எப்பொழுதும் ஜிபிஎஸ் ஆன் செய்து வைப்பது பேட்டரியை அதிகமாக எடுத்து கொள்ளும். முடிந்த வரை பயன்படுத்தாத நேரங்களில் ஜிபிஎஸ் ஆஃப் செய்து வைக்க வேண்டும்.
ப்ளூடூத், வைபை பயன் இல்லாத நேரங்களில் ப்ளூடூத், வைபை, 3ஜி, 4ஜி என அனைத்தையும் ஆஃப் செய்ய வேண்டும்.
நோட்டிபிகேஷன் பயன்படுத்தும் அனைத்து அப்ளிகேஷன்களுக்கும் நோட்டிபிகேஷன்களை வைக்காமல், அவசியமான அப்ளிகேஷன்களுக்கு மட்டும் நோட்டிபிகேஷன்களை ஆன் செய்து வைக்கலாம்.
வெப்பம் ஸ்மர்ட்போன்களை நேரடியாக சூரிய வெளிச்சம் வரும் இடம் மற்றும் சூடான இடங்களில் வைப்பது போனின் பேட்டரியை பாதிக்கும்.
No comments:
Post a Comment