பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும், மத்திய அரசுக்கும் சம்பந்தம் இல்லை என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசுக்குசம்பந்தம் இல்லை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து உள்ளதால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து உள்ளது. எண்ணெய் நிறுவனங்கள்தான் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளன. இந்த விலை உயர்வுக்கும், மத்திய அரசுக்கும் சம்பந்தம் இல்லை.
எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை மத்திய அரசு திரும்ப பெறும் திட்டம் இப்போது உடனடியாக இல்லை. ஏற்கனவே உள்ள நிலையே தொடரும்.
விவசாயிகளுக்கு சலுகைகள்
விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி அவர்களது வாழ்வாதாரம் உயர்வதற்கு வழி வகுத்து வருகிறது. அப்போது எல்லாம் மத்திய அரசை பாராட்டாத எதிர்க்கட்சிகள், தற்போது கடனுக்கான வட்டியை மிகக்குறைந்த அளவு மாற்றி அமைத்ததை வரிந்துகட்டி கொண்டு எதிர்ப்பது சரியானது அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவரிடம், “தி.மு.க. கூட்டணியில் பிற கட்சிகளை சேர்க்க தி.மு.க. முயற்சித்து வருகிறதே?” என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், “புலிக்கு பயந்தவன், புலி வருகிறது யாராவது பயந்தால் என் மீது ஏறிபடுத்துக்கொள்ளுங்கள் என்பது போல் இருக்கிறது” என்றார்.
No comments:
Post a Comment