திருச்சியைச் சேர்ந்தவர் சுகன்யா (வயது26). இவர் சென்னை திருமங்கலத்தில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ். அகடமியில் படித்து வருகிறார். விரைவில் ஐ.ஏ.எஸ். தேர்வை எழுத உள்ளார். திருமங்கலத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்து வகுப்புக்கு சென்று வருகிறார்.
இந்த நிலையில் சுகன்யா நேற்று இரவு திருமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு இன்ஸ் பெக்டர் முருகேசனிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:–
நானும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள போலீஸ் அகாடமியில் சப்–இன்ஸ்பெக்டராக பணி புரியும் ஒருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் உள்ள கல்லூரியில் ஒன்றாக படித்தோம். நாங்கள் அடிக்கடி பேசியதால் எங்களுக்குள் காதல் ஏற்பட்டது. நாங்கள் அடிக்கடி சந்தித்து பேசுவோம்.
இந்த நிலையில் அவரை எனக்கு பிடிக்கவில்லை. அவரை திருமணம் செய்யவும் விருப்பம் இல்லை. இதனால் அவருடன் உள்ள தொடர்பை துண்டித்து விட்டேன்.
இந்த நிலையில் அந்த சப்–இன்ஸ்பெக்டர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு என்னை வற்புறுத்துகிறார். போனிலும் அடிக்கடி பேசி துன்புறுத்துகிறார். நான் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத தயார் நிலையில் உள்ளேன். அவரது துன்புறுத்தலால் எனது கவனம் திசை திரும்புகிறது.
எனவே அவரை அழைத்து கண்டித்து என்னை துன்புறுத்தாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்ஸ் பெக்டர் முருகசேன் விசாரணை நடத்தி வருகிறார்.
No comments:
Post a Comment