ஆப்கானிஸ்தான் விமான படையில் முதல் பெண் விமானியாக தேர்வு பெற்று பணியாற்றுகிறார் 23 வயது நிரம்பிய இளம் பெண் நிலோபர் ரஹ்மானி.பெண்கள் கல்வி விகிதம் குறைவாக உள்ள ஆப்கானிஸ்தானில் பெண் ஒருவர் விமானியாக தேர்வு பெற்று உலக அரங்கின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
பைலட் நிலோபர் ரஹ்மானி கூறியதாவது,
பயிற்சியை நிறுத்த வேண்டும் என நானும் என் குடும்பத்தாரும் அடையாளம் தெரியாதவர்களால மிரட்டப்பட்டோம்.ஆனால் மன உறுதியுடன் பல சோதனைகளையும் கடந்து இந்த இலக்கை அடைந்துள்ளேன். என்னை போன்று சாதிக்கும் ஆர்வத்துடன் பல பெண்கள் இங்கு உள்ளனர் இங்கு இருபாலாரும் இணையாக பணியாற்றும் காலம் வருவதற்கும் பல ஆண்டுகள் பிடிக்கும் என்றார்.
No comments:
Post a Comment