வீட்டில் ஏதேனும் பணம் தேவை என்றால் எளிதாகக் கடன் வாங்கு நினைப்பவர்கள்
முதலில் தேர்வுசெய்வது தங்க நகை மீதான கடன். இதனை அடுத்தத் தேர்வு செய்வது
சொத்தின் மீதான கடனாக இருக்கும்.
சொத்தை அடமானம் வைத்து வங்கிகள்
அல்லது நிதி நிறுவனங்களில் கடன் பெறும் போது எளிதாகவும் கடன் வாங்க
முடியும். இதற்கு முக்கியக் காரணம் கடன் திருப்பிச் செலுத்த முடியவில்லை
என்றால் சொத்தை ஏலத்தில் விட்டு கடன் தொகை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்
என்பது ஆகும்.
சிக்கல்
இதனால் கடந்த சில
வருடங்களாக வங்கிகள் அடமான கடனை அதிகமாக அளித்துவருகின்றன. ஆனால் இப்போது
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததில் இருந்து சொத்து அடமான கடனில்
புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் துறை மந்தம்
பழைய
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததில் இருந்து
ரியல் எஸ்டேட் துறையும் மந்தமாக உள்ளது. இதனால் சொத்தின் மீதான விலை குறைய
வாய்ப்புள்ளதால் மதிப்பும் குறையும் என்று வங்கிகள் சொத்தின் மீதான அடமான
கடனை குறைத்து வருகின்றது.
சொத்தின் மீதான மதிப்பு
சொத்தின் மீதான மதிப்பு
சிறு நகரங்களில் தொடரும் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு
செல்லா ரூபாய் நோட்டுகள் அறிவித்ததை அடுத்துப் பணப் புழக்கம்
குறைந்துள்ளதால் ரியல் எஸ்டே துறை மந்தமாக இருக்கின்றது. மார்ச் மாதம்
முதல் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு குறையும் என்று மத்திய அரசு கூறி
வந்தாலும் இன்னும் சிறு நகரங்களில் பல ஏடிம் மையங்கள் பூட்டிய நிலையிலேயே
தான் உள்ளன
வாங்க ஆள் இல்லை
இப்போது ரியல் எஸ்டேட் துறை உள்ள சூழலில் சொத்துகளின் மதிப்பு குறைந்து
இருந்தாலும் வாங்குவதற்கு ஆள் இல்லை. இதனால் வங்கிகளும் அடமானத்தில் உள்ள
சொத்தை விற்க முடியாமல் தவித்து வருகின்றன.
வங்கிகள் தயக்கம்
இதனால் சொத்தை அடமானம் வைத்து கடன் அளிக்க வங்கிகள் தயக்கம்
காட்டிவருகின்ற்ன. அப்படியே கடன் அளித்து வந்தாலும் சொத்தின் மதிப்பு
குறைவாகவே காட்டப்பட்டுக் கடன் அளிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment