யாராவது தன்னைத் தானே சிங்கம் என்று சொல்லிக் கொள்வார்களா. வடிவேலு பட
காமெடி போலவே இருக்கிறது சசிகலாவின் பேச்சு என்று முதல்வர் ஓ.பன்னீர்
செல்வம் கிண்டலடித்துள்ளார்.
கூவத்தூர் போயிருந்த சசிகலா அங்கு
அடைத்து வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் மத்தியில் பேசினார்.,
அப்போது தன்னை சிங்கக் குட்டி என்றும் சிங்கம் என்றும் அவர் பேசினார். இதை
தனது பேட்டியின்போது சுட்டிக் காட்டி காமெடி செய்தார் முதல்வர் ஓ.பன்னீர்
செல்வம்.
அவர் இன்று தனது இல்லத்தில் அளித்த பேட்டியின்போது கூறுகையில்,
உங்களிடம் கேட்கிறேன். யாராவது தன்னைத் தானே பார்த்து சிங்கம் என்று
சொல்வார்களா. இவர் தன்னைத் தானே சிங்கம் என்று சொல்கிறார். இதைப்
பார்த்தால் வடிவேலு படத்தில் ஒரு காமெடிக் காட்சிதான் நினைவுக்கு வருகிறது.
தமிழ்
மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர். தமிழக மக்கள் அனைத்தையும் பார்த்துக்
கொண்டுள்ளனர். தமிழ் மக்களின் எழுச்சியை உலகமே பாரக்கிறது.
இதுபோன்ற எழுச்சியை இந்தியா இதுவரை பார்த்ததில்லை. யாரையும் அவர்கள் ஏமாற்ற முடியாது.
இதுபோன்ற எழுச்சியை இந்தியா இதுவரை பார்த்ததில்லை. யாரையும் அவர்கள் ஏமாற்ற முடியாது.
என்னை
கீழ் வரிசையில் உட்கார வைத்து அசிங்கப்படுத்தினார் சசிகலா. என்னிடம் பலர்
இதுகுறித்து போனில் வேதனைப்பட்டுப் பேசியபோது நான் பொறுமையாக இருக்கச்
சொன்னேன். என்னிடம் பேசியது போலயாரிடமும் பேசாதீங்க என்று
அமைதிப்படுத்தினேன்.
முதல்வர் ஜெயலலிதா என்னை தனக்கு சமமாகத்தான்
உட்கார வைப்பார். ஒருபோதும் என்னை அவர் அவமதித்ததில்லை. அனைத்து
எம்.எல்.ஏக்களையும் சுதந்திரமாக, சுயாதீனமாக செயல்பட அனுமதித்தால் அத்தனை
பேரும் எனக்குத்தான் ஆதரவு தெரிவிப்பார்கள். சட்டசபையில் நான்தான் அறுதிப்
பெரும்பான்மையை நிரூபிப்பேன். இது உறுதி என்றார் முதல்வர் ஓ.பன்னீர்
செல்வம்.
No comments:
Post a Comment