ஜார்க்கண்டில் வரதட்சணை கேட்டு மருமகளை நிர்வாணமாக்கி அதை வீடியோ எடுத்து மாமனார், மாமியார் மிரட்டியுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்ஷெட்பூரில் பெண் ஒருவரை நிர்வாணமாக்கி அவரை வீட்டுக்குள் நடக்கவிட்டு அதை அவரது மாமனார், மாமியார் வீடியோ எடுத்துள்ளனர். உன் பெற்றோரிடம் ரூ.50 லட்சம் வரதட்சணை வாங்கி வராவிட்டால் இந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து அந்த பெண் இது குறித்து கோவிந்த்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணின் கணவரை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அந்த பெண்ணின் மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வரதட்சணை கேட்டு அவரை அடிக்கடி அடித்து கொடுமைப்படுத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது. ஜம்ஷெட்பூரில் அண்மை காலமாக பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 பெண்கள் பாதிகப்பட்டுள்ளனர். பாலியல் கொடுமைக்கு ஆளான 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். மேலும் பைக்கில் வந்த நகை பறிக்கும் ஆசாமிகள் பெண் ஒருவரை கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment