அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 16,17 வது வார்டு பகுதிகளில் அள்ளப்படாமல் குமிந்து காணப்பட்டு வந்த குப்பை கூளங்களை அப்புறப்படுத்த பல்வேறு தரப்பில் வேண்டுகோள் விடப்பட்டது.
இவற்றை உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்ட பேரூராட்சி நிர்வாகம் இந்த பகுதியில் காணப்படும் குப்பை கூளங்களை அள்ளிச்செல்ல உத்தரவிட்டது. இதையடுத்து இன்று இரவு 7 மணியளவில் களத்தில் இறங்கிய துப்புரவு பணியாளர்கள் இந்த பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பை கூளங்களை துரிதமாக அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் இவர்களின் துரித பணியை வெகுவாக பாராட்டினர்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment