Latest News

திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள்; கருணாநிதி- கிருஷ்ணசாமி சந்திப்பில் உடன்பாடு!


திமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று நேரில் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த கூட்டணியில் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி, இன்று மாலைக்குள் கூட்டணியை அறிவிப்பேன்; வெற்றிக் கூட்டணியில் இடம்பெறுவோம் எனக் கூறியிருந்தார்.இதனைத் தொடர்ந்து கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்து பேசினார் கிருஷ்ணசாமி. இச்சந்திப்பின் போது திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதற்கான ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.