தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்ட நால்வர் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் தீர்பளிக்கப்பட்டது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது 1996ம் அண்டு தொடரப்பட்ட வழக்கில், 18 ஆண்டுகள் கழித்து ஜெயலலிதா குற்றவாளி என நிரூபனமாகி, கடந்த செப்டம்பர் 27ம் நாள் ஜெ., உள்ளிட்ட நால்வருக்கும் 4 ஆண்டு சிறைதண்டனையுடன், அபராதமும் விதித்து கர்நாடக நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்பளித்தார்.
தொடர்ந்து ஜெ., வின் ஜாமின் மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மறுக்கப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு அக்டோபர் 17ம் நாள் விசாரிக்கப்பட்டு, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் வழக்கு தொடர்பான ஆவணங்களை டிசம்பர் 18ம் தேதிக்குள் கர்நாடக மாநில ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதனை அடுத்து கர்நாடக மாநில ஐகோர்ட்டில் ஒரு லட்சத்து 72 ஆயிரம் பக்க ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு ரசீது பெறப்பட்டது. இதனை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள், இந்த வழக்கை முன்கூட்டியே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது இந்த விசாரனையின் முடிவில், ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கை 3 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க கர்நாடக ஐகோர்ட் நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அதோடு, ஜெயலலிதாவிற்கு 2015ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி வரை ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை நீதிபதி தத்து தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் ஜாமீனும் நீட்டிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment