லவ் ஜிகாத்” ஒரு பச்சை பொய் – பரபப்பு வாக்கு மூலம் !.
உத்தரப்பிரதேசத்தில் நாளுக்கு நாள் பெண்கள் கற்பழிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி வருவதாக குற்றச்சாட்டு கிளம்பிய நிலையில் அங்கு பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் அம்மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் மதராசாவில் அடைத்து வைத்து கும்பல் ஒன்று தன்னை கற்பழித்ததாக பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். இப்புகார் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பள்ளியில் வேலை செய்து வரும் அப்பெண் தனது வீட்டிற்கு திரும்பும் வழியில் கும்பல் ஒன்று தன்னை கடத்தி, அங்குள்ள மதராசாவில் வைத்து கற்பழித்ததுடன், இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியதாக தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குடும்பத்தினர் துன்புறுத்தியதால் பொய்யான புகார் அளித்ததாக தற்போது அப்பெண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். தான் ஒரு இஸ்லாமிய இளைஞரை காதலித்தாகவும், அது பற்றி தெரிந்ததால், தனது பெற்றோர் தன்னை அடித்து துன்புறுத்தி இவ்வாறு புகார் அளிக்கவைத்ததாகவும் அப்பெண் போலீசில் கூறியுள்ளார்.
இத்தகவலை மீரட் நகர எஸ்.எஸ்.பி. ஓம்கார் சிங் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்லாமிய சமூகத்தின் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பும் நோக்கில் இப்புகார் அளிக்கப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது.
இந்திய பத்திரிக்கைகளால் முஸ்லிம் சமூகத்தின் மீது புனையப்பட்ட இந்த செய்தியை வைத்து பரபப்பு ஏற்படுத்திய பல பத்திரிகைகளில் இந்த செய்தி இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment