உத்திரப்பிரதேசத்தில் 10 வயது சிறுவனை புலி ஒன்று கடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசம் மாநிலம் பிஞ்னோர் மாவட்டத்தில் வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள குடியிறுப்புப் பகுதியில் உள்ள வீட்டு வாசலில் 10 வயது சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.
அப்போது வனப் பகுதியில் இருந்து ஓடி வந்த புலி ஒன்று அச்சிறுவனைக் கடித்துள்ளது.
இதில், அச்சிறுவன் பலத்த காயமடைந்தான். அதற்குள்ளாக சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள், கம்பு மற்றும் கல் கொண்டு அப்புலியை விரட்டினர்.
இதனால் தாக்குதலுக்குப் பயந்து அச்சிறுவனை விட்டு விட்டு காட்டுக்குள் ஓடிச் சென்று மறைந்தது . ஆனால் அதற்குள்ளாக அதிக இரத்தப் போக்கினால் அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
கடந்த மாதம் டெல்லி உயிரியல் பூங்காவில் இளைஞன் ஒருவனை புலி ஒன்று கடித்துகொன்றது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment