Latest News

ஏன்? யோசியுங்கள்.

நீங்கள் விரும்பும் "வெற்றி' எது என்று தெளிவாக வரையறுத்துக்கொள்ளுங்கள். வெறுமனே பணம் சம்பாதிப்பது மட்டும் வெற்றியாகிவிடாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

* ரொம்பச் சிரமப்பட்டு எதிர்நீச்சல் போட்டுதான் முன்னேறியாகவேண்டும். அதேநேரம், உங்களைப்போல் கஷ்டப்பட்டு உழைக்காமல் முன்னுக்கு வருகிறவர்களும் இருப்பார்கள். அவர்களைப் பார்த்துப் புலம்பாமல், உங்கள் முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

*  உங்களுடைய வெற்றி, தோல்வி இரண்டுமே எதேச்சையாக வருபவை இல்லை. அதிர்ஷ்டத்தாலோ துரதிருஷ்டத்தாலோ நிகழ்பவை இல்லை. எல்லாம் நீங்கள் எடுக்கும் முடிவுகளில்தான் இருக்கிறது.

* வெற்றிக்கு சில பழக்கங்கள், ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள் அவசியம். ஜெயித்தவர்களைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்களிடம் உள்ள எந்தெந்தப் பழக்கங்கள் உங்களிடம் உள்ளன? எவையெல்லாம் விடுபடுகிறது? ஏன்? யோசியுங்கள்.

*  உங்களுக்கு சின்னச் சின்ன உதவி செய்தவர்களுக்குக்கூட மனமார நன்றி சொல்லப் பழகுங்கள்.

*  திறமை உள்ளவர்களுக்கு மரியாதை கொடுங்கள். மற்றவர்களைவிட நீங்கள்தான் உசத்தி என்கிற அகம்பாவம் வேண்டாம்.

*  உங்களை உழைக்கத் தூண்டுவதற்கு இன்னொருவரை எதிர்பார்க்காதீர்கள்.

* சில சமயங்களில் ஒன்றைப் பெறுவதற்காக நீங்கள் இன்னொன்றை இழக்கவேண்டியிருக்கலாம். அதுமாதிரி தருணங்களில் எது முக்கியம் என்று நன்றாக யோசித்து முடிவெடுங்கள்.

*  எல்லோருக்கும் 24 மணி நேரம்தான் . ஆகவே "எனக்கு நேரமே போதலை' என்று புலம்பாதீர்கள்.

* வெற்றியைத் துரத்தும் அவசரத்தில் உங்கள் உடம்பை மறந்துவிடாதீர்கள்.

* தோல்வியே இல்லாத வாழ்க்கை போரடிக்கும். பெரிய வெற்றியாளர்கள்கூட அவ்வப்போது தோற்றிருக்கிறார்கள். நீங்களும் எப்போதாவது தோற்கலாம். தப்பில்லை.

*  நீங்கள் எவ்வளவு ஜெயித்தாலும் சரி, எத்தனை உயரத்துக்குச் சென்றாலும் சரி " நல்ல மனிதர்' என்று பெயர் எடுக்காவிட்டால் அவை எல்லாம் அர்த்தம் இழந்துவிடுகின்றன. வெற்றிக்காகக் குணத்தை விட்டுக்கொடுக்காதீர்கள். "நான் நல்லவனாக வாழ்ந்தேன்' என்கிற திருப்திதான் மற்ற எல்லாவற்றையும்விட மிகப்பெரியது!.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.