இந்தியாவின் 67 வது சுதந்திர தின விழா இன்று [ 15/08/2013 ] காலை நாடெங்கிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொண்டாடப்பட்ட சுதந்திர தினவிழாவில் அதிரை நகர காங்கிரஸ் தலைவர் M.M.S. அப்துல் கரீம் அவர்கள் இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையை நிகழ்த்தினார்.
முன்னதாக வந்திருந்த அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் அன்புடன் வரவேற்றனர்.
மாணவ மாணவியரின் அறிவுத்திறன் நிகழ்ச்சியும் நடைபெற்றன. விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் V.T. தகளா மரைக்காயர் மற்றும் ஏனைய நிர்வாகிகள், பள்ளி மாணவ, மாணவியர், ஊர் முக்கியஸ்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment