Latest News

TNPSC குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன

TNPSC குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 17 லட்சத்து 552 பேர் விண்ணப்பித்த நிலையில், 14 லட்சத்து 653 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து,TNPSC தலைவர் நவநீத கிருஷ்ணன் கூறியதாவது: இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளிலான மொத்தம் 5,566 பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 17 லட்சத்து 552 பேரில், 3 லட்சத்து 441 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இத்தேர்வை கண்காணிக்க 950 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுக்காக, மாநிலம் முழுவதும் 244 மையங்களில் 4,755 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 14 லட்சத்து 653 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை, இத்தேர்வு நடைபெறுகிறது. http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் சென்று ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நவநீதகிருஷ்ணன், நிருபர்களிடம், நேற்று கூறியதாவது: தட்டச்சர், இளநிலை உதவியாளர் போன்ற பணிகளில், குரூப் - 4 நிலையில் உள்ள, 5,566 காலி பணியிடங்களை நிரப்ப, வரும், 25ம் தேதி, போட்டித் தேர்வு நடக்கிறது. இதற்கு, 17 லட்சம் பேர், விண்ணப்பித்தனர்.

எனினும், ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்தது, விண்ணப்ப கட்டணம், தேர்வுக் கட்டணம் செலுத்தாதது போன்ற காரணங்களால், 3 லட்சம் விண்ணப்பங்களும், உரிய தகுதியின்மை காரணமாக, 458 விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன.

இறுதியாக, 14 லட்சம் பேர், தேர்வை எழுதுகின்றனர். 4,755 தேர்வு கூடங்களில், தேர்வு நடக்கிறது. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, www.tnpsc.gov.in, www.tnscexams.net ஆகிய இணையதளங்களில், ஹால் டிக்கெட்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வு மையத்தின் அமைவிடத்தை, தேர்வர்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், தேர்வு மைய முகவரியுடன், தொலைபேசி எண் மற்றும் பக்கத்தில் உள்ள முக்கியமான, "லேண்ட் மார்க்" இடத்தையும் குறிப்பிட்டுள்ளோம்.

சரியான முறையில் விண்ணப்பித்தும், "ஹால் டிக்கெட்" கிடைக்காதவர்கள், கட்டணம் செலுத்தியதற்கான ரசீதுடன், contacttnpsc@gmail.com என்ற, இ-மெயில் முகவரிக்கு, 19ம் தேதிக்கு முன், தகவல் தெரிவிக்கலாம்.

தேர்வை கண்காணிப்பதற்கு, தீவிர ஏற்பாடுகளை செய்துள்ளோம். 4,755 முதன்மை கண்காணிப்பாளர், 70,230 கண்காணிப்பாளர், 4,500 ஆய்வு அலுவலர், 950 பறக்கும் படை அதிகாரி ஆகியோர், கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.

அனைத்து தேர்வு மையங்களிலும், வீடியோ பதிவு நடக்கும். மேலும், பதட்டமான தேர்வு மையங்கள், "ஆன்-லைன்" வழியாக, மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும், தேர்வாணைய தலைமை அலுவலகத்திலும், தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.