Latest News

பிளாஸ்டிக் – வரமா! சாபமா?


அம்மா…. கடைக்கு போலாமா…  சரி… ஆணியிலே மாட்டி இருகிறே அந்த கூடையை எடுத்து வா.. போவோம்.  கூடை நிறைய பொருட்களை வாங்கி கொண்டு வீட்டிற்கு வருவதே ஒரு அலாதியான சந்தோசம்… அதெல்லாம் ஒரு காலம்.. இப்போது பத்து ரூபாய் பொருளுக்கே  பிளாஸ்டிக் பையில் வாங்கி வரும் காலம்.  கையை வீசி கொண்டு வீட்டிலிருந்து கிளம்பி கடைக்கு போய் வரும் போது கை நிறைய  பிளாஸ்டிக் பையில் பொருட்களை வாங்கி கொண்டு வருவது இப்போது பேஷன்.   துணி பை அல்லது வயர் கூடையில்  பொருட்களை வாங்கி கொண்டு வந்தவர்களை, பிளாஸ்டிக் பையை உருவாக்கி அதையே உபோயோகிய வைத்து  அது இல்லாமல் இருக்கவே முடியாது என்ற சூழ்நிலையை உருவாக்கி விட்டதற்கு யார் காரணம்?  எளிதில் மட்காமல் பலநுறு ஆண்டுகள் நிலைத்திருக்கக் கூடியது பிளாஸ்டிக்’ என்ற தவறான எண்ணம் மக்களிடையே பரவி விட்டது. பிளாஸ்டிக் குடம் இல்லாத வீட்டைக் காட்டுங்கள் என்று யாராவது நம்மிடம் சவால் விட்டால் நிச்சயமாக நாம் தோற்றுத்தான் போவோம்.

ஒரு அரசாங்கம், ஏதொரு புதிய பொருள் சந்தையில் வருமானால், அந்த பொருளின் மூலம் யாதொரு கேடு வருமானால்,  அதை முளையிலே கிள்ளி எரிவதை விட்டு விட்டு, அது செடியாகி, மரமாகும் வரை விட்டு விட்டு, இப்போது மரத்தையே வெட்டினால்தான் நல்லது என்று கூறுவது நியாயம் என்றாலும், இவ்வளவு தூரம் வளர்த்து விட்டதற்கு யார் காரணம்?    இனி ஒன்றும் சொல்லி புண்ணியமில்லை.   ஏனென்றால்  பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் உற்பத்தி செய்வதற்கும் தடை விதிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. மீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இருந்தாலும் சமுதாய நோக்கோடு  பயோடெக் பேக்ஸ் வெளியிட்ட அறிக்கையில்  இருந்து  ஒரு சில துளிகள்:

ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள்.கடலில் மிதந்துகொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே!  தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக்கே காரணம். இப்படி அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது. ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.

பிளாஸ்டிக் பைகள் மக்குவதற்கு ஆகும் காலமோ 100-1000 ஆண்டுகள்

பிளாஸ்டிக் பாட்டில்கள் – எக்காலத்திலும் அழியாது.

எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது.

பிளாஸ்டிக்கை எதிர்த்து குரல் கொடுப்பது ஒருபுறம் இருந்தாலும், அதற்கான மாற்றுபொருட்களை கண்டுபிடிபதிலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அரசும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

 எனவே பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கப் பழகுவோம்.  அவசரத் தேவைக்கு ஒன்றிரண்டு முறை பிளாஸ்டிக் பையை பயன்படுத்தினால், அந்த பிளாஸ்டிக் பொருட்களை குப்பையோடு குப்பையாகப் போடாமல், சேமித்து மறுசுழற்சிக்கு அனுப்புவோம்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.