எங்க ஊர் இளையான்குடி வாரச்சந்தையில் நான் சிறுவனாக இருந்தபோது ஒரு வித்தைக் காட்டுபவன் ஒரு கூடையில் நல்ல பாம்பினை மூடி வைத்துக் கொண்டும், இன்னொரு பக்கம் கீரிப்பிள்ளையினை ஒரு கம்பியில் கட்டி வைத்துக் கொண்டு காலையிலிருந்து தனது மாயா ஜால வார்த்தைகளால் தாயத்து விற்ற கதையினை நினைத்து இன்றும் சிரிப்பாக வருகிறது, வித்தைக் காட்டுபவன் சிறிது நேரத்தில் பாம்பினை திறந்து விட்டு கீரியுடன் சண்டைவிடப் போவதாக சொல்லிக்...
கொண்டேயிருந்ததால் நானும் மற்றவர்களுடன் கால் கடுக்க வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவன் அதனைச் சொல்லியே தா சிரிப்புத்தான் வருகுதய்யா சீப்பான தீர்ப்பினைக் கண்டு!
யத்தினை விற்க மும்மரம் காட்டி கடைசியில் கால் கடுக்க நின்ற என்னைப்போன்றோர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய கதைபோன்று தான், ‘வருது வருது அலஹபாத் பாபரி மஸ்ஜித் தீர்ப்பு’ வருகிறது என்ற கதை கந்தலாகி சென்ற செப்டம்பர் மாதம் 30ந்தேதி மருந்தில்லாத தீபாவளி புஸ்வானம் ஆனது.
யத்தினை விற்க மும்மரம் காட்டி கடைசியில் கால் கடுக்க நின்ற என்னைப்போன்றோர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய கதைபோன்று தான், ‘வருது வருது அலஹபாத் பாபரி மஸ்ஜித் தீர்ப்பு’ வருகிறது என்ற கதை கந்தலாகி சென்ற செப்டம்பர் மாதம் 30ந்தேதி மருந்தில்லாத தீபாவளி புஸ்வானம் ஆனது.
முஸ்லிம் மன்னர்கள் மெஜாரட்டி இந்துக்களுக்கு எதிரானவர்கள். அவர்கள் பெரும்பாலோர் கோயிலை இடித்து மஸ்ஜித் கட்டினார்கள் என்ற கதையினை ஆதாரமில்லாது வெறும் கையினை வைத்தே கயிராக திரித்து கதை விட்டுக் கொண்டிருந்தது முகலாய மன்னர்கள் ஆட்சி காலங்களில்லை மாறாக இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பின்பு மைனாரிட்டி முஸ்லிம்களை இழிவு படுத்துவதிற்காக வைக்கப் பட்ட கோசமேயாகும் என்றால் மிகையாகாது. பாபரோ அல்லது அவருக்கு பின் வந்த ஹ_மாயுனோ அது போன்ற காரியங்களில் ஈடுபட்டதாக ஏதாவது அன்றைய காலத்திய ஆதாரப் பூர்வமான சரித்திரம் அல்லது கல்வெட்டுகள் உள்ளதா? அல்லது போரின்போது கோயில்களை இடியுங்கள் என்று முகலாய தளபதிகளுக்கு ஆணை பிறப்பித்த உத்திரவுகள் உள்ளதா? ‘பாபர் நாமா’விலாவது அல்லது அக்பர் நாமாவிலாது குறிப்பிடப்பட்டுள்ளதா? ஏன் அக்பர் காலத்தில் ஏராளமான இந்து மத அறிஞர்கள் அவையில் கூடியிருந்தார்களே அவர்களாவது குறிப்பிட்டுள்ளார்களா என்றால் இல்லையே? பின் ஏன் ‘மாடர்ன் இந்தியாவில்’ மட்டும் அது போன்ற ஒரு குரல் எழுப்பப் பட்டது? அங்கே தான் மூட்டைக்குள் கட்டிவைக்கப்பட்ட மர்மம் வந்து உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பிரிவினை விரும்பாதவர்கள், பல்வேறு தவிர்க்க முடியாத காரணங்களால் பிரிவினை ஏற்பட்டபோது பல படுகொலைகள், கொள்ளைகனை மைனாரிட்டி முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தியதினை விரும்பாத மகாத்மா காந்தி உண்ணா நோன்பு இருந்தபோது அதனை தாங்காதவர்கள் திட்டம் போட்டு அவரை படுகொலை செய்தது மட்டுமல்லாமல் அதன் பின்பு ஆட்சியினை தங்கள் கைக்குள் கொண்டுவர படாதபாடு பட்டனர். அதில் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் வெற்றியும் கண்டனர்.
எப்போது பாரதிய ஜனதா மத்தியில் ஆட்சி செய்ய ஆரம்பித்தார்களோ அப்போதே முகலாய முதல் மன்னர் பெயரினை தாங்கிய புராதான சின்னமான பாபரி மஸ்ஜிதை தகர்க்க திட்டம் தீட்டினர். பாபரி மஸ்ஜித் ராமர் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா என்று ஆராய தொல் பொருள் ஆராய்ச்சி நிபுணர்களை குழுவினை அமைத்து அதன் அறிக்கையினை அலஹபாத் கோர்ட்டில் சமர்ப்பித்தனர். அந்த தொல் பொருள் ஆராய்ச்சி இலாகா யார் பொறுப்பில் இருந்தது? பி.ஜே.பி ஆட்சியில் கல்வி மந்திரியாக இருந்தவரும் 1992 டிசம்பர் ஆறாந்தேதி பாபரி மஸ்ஜித் இடிப்பில் குற்றம் சாட்டவருமான முரளி மனோகர் வசம் இருந்தது.
ஆகவே தொல்பொருள் ஆராய்ச்சியின் அறிக்கை எப்படி இருந்திருக்கும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். சாதாரணமாக ஒரு நிபணர் குழு இருந்தால் அந்தக் குழுவின் தலைவராக அந்தத்துறையினைச் சாராத ஒரு நடுநாயகமான நீதிபதி ஒருவர் இருப்பார். மற்றும் இரு தரப்பு பிரதிநிதிகளும் இருப்பர்.அது போன்றுதான் 136 அடி உயரங்கொண்ட முல்லைப் பெரியார் அணையிணை 142 அடியாக உயர்த்த தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்தபோது அதனை கேரள அரசு அணை அவ்வளவு பலமாக இல்லையென்ற காரணத்தினைக் காட்டி எதிர்த்தது. ஆகவே அந்த அணையின் பலத்தினை ஆராய ஒரு நிபுணர் குழவினை முன்னாள் சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் சுப்ரீம் கோர்ட் நியமித்தது. ஆனால் பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் அது போன்ற ஒரு நீதிபதி தலைமையில் தொல் பொருள் நிபுணர் ஆராய உத்திரவிடவில்லையே அது ஏன் என்ற கேள்வி சாதாரண குடிமகன் ஏழுப்பும் கேள்வியாக இல்லையா? அங்கே தான் காவித்தலைவர்கள் திருத்தி தரும் வகையில் ஒரு தலைபட்சமாக அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதோ என்ற அய்யப்பாடும் அந்த சந்தேகமாக அறிக்கையின் பேரில் மூன்று நீதிபதிகளில் இருவர் இரண்டு பகுதியினை ராமர் கோயிலுக்கு ஆதரவாக மத சார்பற்ற கொள்கையின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிராக மேலும் சட்டத்தினை விட நம்பிக்கைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட தீர்ப்புக் கூறியுள்ளதாக பரவலாக ஊடகங்களும் நடுநிலையாளர்களும் ஏன் முஸ்லிம் மத்திய சட்ட வாரிய செயலாளர் ரஹீம் அவர்களும் கூறுகின்றனர். இதனை சில பத்திரிக்கை நடுநிலையாளர்களும் இடதுசாரி கட்சிகளும் எழுதப்பட்ட தீர்ப்பாக அறிவித்துள்ளனர். அது என்ன எழுதப்பட்ட தீர்ப்பு என்று கேட்க உங்கள் மனம் தூண்டும். வேறொன்றுமில்லை அது ஏற்கனவே ராமர் கோயில் எழுப்ப கங்கணம் கட்டிக்கொண்டுள்ளவர்களால் எழுதப்பட்ட தீர்ப்பாக கருதுகின்றனர். ஏனென்றால் சர்ச்சைக்குள்ள இடத்திலும் சேர்த்து கோயில் கட்ட கட்டுமான பணிகள் மற்றும் தளவாட சாமான்கள் தயார் நிலையில் உள்ளன. தீர்ப்பு ஒரு கண்துடைப்பே என்று கருதி சிரிப்பாக வருகிறது என்றேன்.
சென்ற 15.10.2010 அன்று ஒரு செய்தியினை தமிழ் பத்திரிக்கையில் படித்தேன். அது என்ன தெரியுமா? கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மெஜாரிட்டியாக உள்ள ஹிந்துக்கள் பகுதியிலிருந்து ஆதிதிராவிட மக்களை தடுப்பதிற்காக காலனிப்பக்கம் ஒரு முள்வேளி அமைத்துள்ளார்கள். அதனை மார்க்கிஸ்ட் எம்.எல்.ஏ மகேந்திரன் அரசு கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். உடனே மாவட்ட கலெக்டர் அவர்கள் அந்த கிராமத்திற்குச் சென்று ஆய்வு செய்து அந்த வேலி இருப்பது உண்மையென அறிந்து அதனை உடனடியாக அகற்ற உத்திரவிட்டு அதனை அகற்றும் போது கலெக்டர் நிற்பதினையும் படத்துடன் நாளேடுகள் வெளியிட்டன. சாதாரண ஒரே ஹிந்து மத கொள்கையினைக் கொண்ட தலித் மக்களுக்கே அநீதி இழைக்குப்படும் போது மைனாரிட்டி முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுவது ஆச்சரிமில்லைதான் என்றாலும் ஒரு மாவட்ட கலெக்டர் செய்த காரியத்தினை ஏன் ஒரு ஹைக்கோர்ட் நீதிபதிகள் அநியாயமாக ஒரு பள்ளிவாசலை இடித்து அதற்கு உரினை கொண்டாடும் செயலுக்கு மரண அடிகொடுக்கும் வகையில் ஏன் தீர்ப்பு வழங்க முடியவில்லை என்று நினைக்கும் போது சிரிப்பாகத்தானே இருக்கும்.
அதற்கு மேலாக காஞ்சி சங்கரராமன் புகழ் ஆச்சாரியார் சொல்கிறார் அந்த இடத்தில் முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்ட முயலமாட்டார்கள், அத்துடன் அவர்கள் பல்வேறு சன்னி, சியா போன்ற பிரிவுகளாக இருப்பதாலும் முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல் வௌ;வேறு இடங்களில் இருப்பதால் அயோத்தியா பாபரி மஸ்ஜித் இடித்த இடத்தில் பள்ளி வாசல் கட்ட விரும்ப மாட்டார்கள் என்ற ஞாநேபதாசத்தினை உதிர்த்துள்ளார். ஒரு மதம் என்று இருந்தால் பல பிரிவுகள் இருக்கத்தான் செய்யும் என்று அறியாதவர் அல்ல அந்த ஆச்சாரியார். ஏன் யானைக்கு நாமம் போடும் போது வடகலை தென்கலை என்ற பிரிவிற்குக் கூட சண்டை சச்சரவுகள் அவர்கள் கொண்ட மதத்தில்லையா? பின் ஏன் மற்ற மதத்தினை ஈயத்திபை;பார்த்து இளிச்சதாம் பித்தளை போன்று இளிக்கிறார். அதற்காக பாரம்பரிய பள்ளிவாசலை அட்டூழியாக இடித்து அநியாயமாக அபகரிக்க வேண்டுமா?
ஹிந்துத்துவா பெரியவர் வேதாந்தம் சொல்கிறார் நாங்கள் பாபரி மஸ்ஜித்தோடு விடமாட்டோம் இன்னும் காசி, மதுரா போன்று 3000க்கு மேற்பட்ட சர்ச்சைக்குரிய இடத்தினுக்கு உரிமை கொண்டாடுவோம் என்று போர்க்குரல் எழுப்பியுள்ளார். அவருக்கு ஒன்று கேட்கிறேன் முதலில் உச்ச நீதி மன்றத்தில் தெரிவித்த கணக்குப்படி சென்னையிலுள்ள 900க்கு மேற்பட்ட அரசு நிலத்தில் ஆக்கிரமித்துள்ள கோயில்களை நீங்கள் இடித்து விட்டு பின மற்றவர் மதவழிபாடு தளங்களுக்கு உரிமை கோரத்தயாரா?
சிலர் அயோத்தியிலுள்ள 92 வயதான பெரியவர் அன்சாரிக்கு அங்கவஸ்தவரம் போட்டுக் குளிப்பாட்டி சமரசம் செய்து கொள்வோம் என்று தலைப்பாக் கட்டி விட்டுள்ளனர். ஆனால் முன்னாள் மத்திய அரசின் சோலிஸ்டர் ஜென்ரல் சோலி சொராப்ஜி என்ன சொல்கிறார் தெரியுமா? பாபரி மஸஜித் விவகாரத்தில் சமரசத்திற்கே வழியில்லை. தீர்வு கான சுப்ரீம் கோர்ட் அப்பீலே ஒரே வழி என்கிறார். அதற்கு ஏற்றாப்போல மத்திய முஸ்லிம் சட்ட வாரியமும் 16.10.2010 அன்று கூடி அலஹபாத் ஹைக்கோர்ட் தீர்ப்பின் அதிகாரப் பூர்வ நகல் கிடைத்ததும் அப்பீல் செய்வோம் எனக் கூறியுள்ளார்கள். அதற்கு முந்திக் கொண்டு ஹிந்து அமைப்பினர் உச்ச நீதி மன்றத்தில் அதுபோன்ற ஒரு அப்பீல் மனு வரும் பட்சத்தில் தங்களைக் தெரிவிக்காமல் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என்ற ‘கேவியட்’ தாக்கல் செய்துள்ளனர். இது எதனைக் காட்டுகிறது என்றால் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமானது அதனை எதிர்த்து மேல் முறையீடு முஸ்லிம்கள் செய்யக் கூடாது என்பதினைத்தான்.
ஆகவே முஸ்லிம் சட்ட வாரியம் இனியும் காலந்தாழ்த்தாது உச்ச நீதி மன்றத்தினை விரைவில் அனுக வேண்டுமென்று பெரும்பாலான முஸ்லிம்களும,; நடுநிலையாளர்களும்
தகவல் அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment