குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியை தனது கொள்கை ரீதியான வாரிசாக நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல் அங்கீகரிக்க மறுத்திருப்பார் என்று மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் கூறியுள்ளார்.
அண்மைக் காலமாக படேலை சொந்தம் கொண்டாடி புகழ்ந்து வருகின்றனர் மோடியும், பா.ஜ.கவினரும்.
இந்நிலையில் சர்தார் வல்லபாய் படேல் குறித்த வரலாற்று நூலை எழுதியுள்ள ராஜ்மோகன் காந்தி சி.என்.என் – ஐ.பி.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது:
“2012-ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தை படேல் பார்த்திருந்தால், ராஜ நீதியை மோடி கடைப்பிடிக்காத காரணத்துக்காக அவர் மீது அதிருப்தி அடைந்திருப்பார் குஜராத்தைச் சேர்ந்த படேல். கலவரத்தை தடுக்க மோடி அரசு தவறிவிட்டது குறித்தும், துயரச் சம்பவத்தை கண்டும் மிகவும் வருந்தியிருப்பார்.
தன்னை படேலின் வாரிசாக மோடி காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார். இது படேல் குறித்த கருத்தை தவறாக மாற்றிவிடும்.
காந்தியின் சீடராகவும், காங்கிரஸ் காரராகவும் இருந்தவர் படேல்.ஆனால், ஆர்.எஸ்.எஸ்ஸின் வழித் தடத்தில் செல்பவர் மோடி. படேல் பின்பற்றிய கொள்கையை கடைப்பிடித்து மோடி தன்னை வளர்த்துக்கொண்டால் மகிழ்ச்சியே!
படேல் அணியை கட்டமைப்பதில் வல்லவர். மற்றவர்களுக்கு தனது வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் அளிப்பார். அதைப் போலவே மோடியும் செயல்பட்டால், அது பாரட்டுக்குரியதே என்று ராஜ்மோகன் காந்தி கூறியுள்ளார்.
நன்றி : http://indru.todayindia.info
No comments:
Post a Comment